திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா அக்ஸரியன் சுப்பர் லீக் 2021 ஆம் ஆண்டுக்கான உதை பந்தாட்ட முதலாவது சுற்றுப் போட்டி ஆரம்ப வைபவ நிகழ்வு கிண்ணியா எழிலரங்கு மைதானத்தில் ( 11) இடம் பெற்றது..எதிர்வரும் 14ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இறுதிப் போட்டி நடைபெறவுள்ளதாக இவ் லீக் போட்டியின் ஸ்தாபகரும் கிண்ணியா அல் அக்ஸா கல்லூரி உடற் கல்வி ஆசிரியருமான ஏ.எல் .எம்.நபீல் தெரிவித்தார்.
இச் சுற்றுப்போட்டியின் நிகழ்வுக்கு யு .என்.வி பௌண்டேஷனின் தலைவரும், ஜக்கிய மக்கள் சக்தி கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இம்ரான் மகரூப் இப் போட்டிக்கு பிரதான அணுசரனை வழங்குகின்றார். அனைத்து போட்டிகளும் இரவில் நடை பெறவுள்ளன.
கிண்ணியா அல் அக்ஸா கல்லூரியில் கல்வி கற்ற பழைய மாணவர்களை உள்ளடக்கியதாக அக்ஸரியன் சுப்பர் லீக் உருவாக்கப் பட்டது.இவ் வீரர்களை கௌரவப் படுத்துவதற்காக இது உருவாக்கப் பட்டது.
.
இப் போட்டியில் அக்ஸரியன் புழு ஈகிள்,அக்ஸரியன் யுபிட்டர்ஸ், அக்ஸரியன் பிலக் பெண்டர்,அக்ஸரியன் ரசிங் ஸ்டார்,அக்ஸரியன் சுப்பர் பைடர், அக்ஸரியன் சுப்பர் போயிஸ்,அக்ஸரியன் சுப்பர் கிங்ஸ்,அக்ஸரியன் போரியஸ் ஆகிய,8 அணிகள் பங்கு பற்றுகின்றன.
.இதில் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசாக ஐம்பதாயிம் ரூபாவும் வெற்றி கிண்ணமும்,இரண்டாவது அணிக்கு நாற்பதாயிரம் ரூபாவும்,மூன்றாவது அணிக்கு முப்பதாயிர்ம் ரூபாவும்,நான்காவது அணிக்கு இருபதாயிரம் ரூபாவும்,இதர அணிக்கு தலா பத்தாயிரம் ரூபாவும் வழங்கப் படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
கிண்ணியா அல் அக்ஸா பாடசாலை முன்றலில் நடை பவணி பிற்பகல் 3 மணியளவில் ஆரம்பமாகி எழிலரங்கு மைதானம் வரை சென்றடைந்தன..பிற்பகல் 4 மணியளவில ஆரம்ப நிகழ்வில் திருகோணமைல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் பிரதம அதிதியாகவும் ,கிண்ணியா நகர சபைத் தலைவர் எஸ்.எச்.எம்.நளீம்,கிண்ணியா பிரதேச செயலாளர் எம.எச்.எம்.கனி,கிண்ணியா சுகாதார வைத்தியதிகாரி எம்.எச்.எம்.றிஸ்வி,கிண்ணியா வலயக் கல்வி அலுவலக உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எச்.எம்.அக்மல்,திருகோணமலை மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளணத்தின் செயலாளர் எம்.எஸ்.சபியுல்லா,கிண்ணியா உலமா சபைத் தலைவர் ஏ.எம்.ஹிதாயதுல்லா,திருமலை பட்டிணம் சூழலும் பிரதேச சபை உப தவிசாளர் ஏ.எல் நௌபர்,ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன கட்சியின் திருகோணமலை மாவட்ட இணைப்பாளர் ஏ.எல்.சதாத்,நெஸ்லே (மைலோ) திருமலை மாவட்ட விற்பனை முகாமையாளர் பிரதாப் குமார ஆகியோர் அதிதிகளாகவும் இதில் கலந்து கொண்டனர்.
இவ் ஆரம்ப போட்டியில் அக்ஸரியன் பிலக் பெண்டர் மற்றும் புழு ஈகிள் அணியினர் பங்கு பற்றினர்.. இரு அணியினரும் கோல் போடாததால் இப்போட்டி சமநிலையில் முடிவுற்றன.
இப்போட்டியில் சிறந்த வீரருக்கான பரிசினை பிலக் பெண்டர் அணியின்18ஆம் இலக்க வீரர் நஹ்தீருக்கு திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வழங்கி வைத்தமை குறிப்பிடத் தக்கது.
0 comments :
Post a Comment