வி.ரி.சகாதேவராஜா-
இன்று(8) சர்வதேச மகளிர் தினமாகும். இன்றைய மகளிர் தினத்தில் வடக்கு கிழக்கு மாகாணத்தில் வீதிஅபிவிருத்தி அதிகாரசபையின் முதல் பெண் மாகாணப்பணிப்பாளராகத்திகழும் வீதிஅபிவிருத்தி அதிகாரசபையின் கிழக்குமாகாணப்பணிப்பாளர் பொறியியலாளர் திருமதி கலைவாணி வன்னியசிங்கம் பாராட்டப்படுகிறார்.
பொறியியல்துறையில் 03 வருடகால சேவையிலுள்ள திருமதி கலைவாணி காரைதீவின் முதல் பெண் பொறியியலாளராவார். காரைதீவில் பயின்று பேராதனை பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டப்படிப்பைப்பூர்த்திசெய்து பின்னர் பட்டப்பின்படிப்பை மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் நிறைவுசெய்து 2000இல் பட்டயப்பொறியியலாளராக தேர்ச்சிபெற்றார்.
வீதிஅபிவிருத்தி அதிகாரசபையின் கிழக்குமாகாணப்பணிப்பாளர் பொறியியலாளர் திருமதி கலைவாணி வன்னியசிங்கம் மேலதிகமாக மட்டு.மாவட்ட பிரதமபொறியியலாளர் பதவியையும் மேற்கொண்டுவருகிறார்.
காரைதீவு பிரதேசசபைத் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் இன்றைய மகளிர்தினத்தில் முதல் பெண்பொறியியலாளரான அவர் முதல் பெண் மாகாணப்பணிப்பாளரானதையிட்டு பாராட்டிக்கௌரவிக்கிறார்.
தாயாரான திருமதி பரமேஸ்வரி கணேசபிள்ளையின் அரவணைப்பில் பொறியியலாளரான இவர் கணவர் இ.க.நி.சேவையைச்சேர்ந்த திரு.வன்னியசிங்கத்தின் வழிகாட்டலில் பதவியுயர்வை படிப்படியாகப்பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment