போட்டிப் பரீட்சை இன்றி நேர்முகப் பரீட்சையின் ஊடாக போட்டிப் பரீட்சை இன்றி நேர்முகப் பரீட்சையின் ஊடாக அதிபர்களை உள்ளீர்ப்பு ஊடகப் பேச்சாளர் மங்களசந்திர சேபநாயகம்; ஊடகப் பேச்சாளர் மங்களசந்திர சேபநாயகம்



எப்.முபாரக்-
போட்டிப் பரீட்சை இன்றி நேர்முகப் பரீட்சையின் ஊடாக அதிபர்களை உள்ளீர்ப்புச் செய்யும் அமைச்சரவைத் தீர்மானத்தை வரவேற்பதாக கிழக்கு தமிழர் ஆசிரியர் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் மங்களசந்திர சேபநாயகம் தெரிவித்தார்
தற்போதைய சூழ்நிலையை கருத்தில்கொண்டு இலங்கை அதிபர் சேவை தரம் IIIக்குப் பொருத்தமான ஆசிரியர்களை போட்டிப்பரீட்சை இன்றி நேர்முகத் தேர்வு மூலம் தெரிவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்தது தொடர்பாக இன்று(11) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்:

நாட்டில் ஏற்பட்டிருந்த யுத்தம் சுனாமி கொரோனா போன்ற அனர்த்தங்களால் ஒரு கட்டத்தில் எத்தனையோ புறநகர் பாடசாலைகளை நடத்த ஆளணி இன்றி இழுத்து மூடிவிடும் அபாயம் இருந்தபோது பாடசாலைகளில் கடமை புரிந்து சிரேஷ்ட ஆசிரியர்கள் கை கொடுத்தனர்.

எனவே இவர்களை நேர்முகத் தேர்வின் மூலம் அதிபர் சேவையில் இணைத்துக் கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதை வரவேற்கின்றோம்.

இந்த நியமனத்தை அரசியலாக மாற்றாது பொது நோக்கம் சார்ந்ததாக வழங்குவார்களாயின் இதில் எந்த ஆட்சேபனையும் எமது சங்கத்துக்கு இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :