இது பற்றி உலமா கட்சி மேலும் தெரிவிக்கையில்:
அண்மையில் மட்டக்களப்பு மாவட்ட காணிச்சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் நேசகுமார் விமலராஜ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் ஊடகவியலாளர்களுக்கான காணி உரிமம் வழங்கி வைக்கப்பட்டது. இதன் போது எந்தவொரு முஸ்லிம் ஊடகவியலாளருக்கு காணி உரிமை வழங்காமை மிக மோசமான இனவாத, மனிதாபிமானமற்ற நடவடிக்கையாகும். இது முஸ்லிம் ஊடகவியலாளர்கள் மீதான மனித உரிமை மீறலாகும்.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தமிழ் , முஸ்லீம் ஊடகவியலாளர்கள் அனைவருக்குமே மாவட்ட செயலகத்தில் இதற்கான நேர்முகப்பரீட்சை நடாத்தப்பட்டது . இருந்தும் , முஸ்லீம் ஊடகவியலாளர்கள் புறக்கணிக்கப்பட்ட நிலையில் தமிழ் ஊடகவியலாளர்களுக்கு மாத்திரம் காணி வழங்கப்பட்டுள்ளமை கண்டனத்துக்குரியது என்பதுடன் இதனை அரச உயர் மட்டம் கருத்தில் எடுத்து முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கும் காணி உரிமை வழங்க வேண்டும் எனவும் உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் கோரிக்கை விடுத்துள்ளார்.
0 comments :
Post a Comment