சம்மாந்துறை உதவி பிரதேச செயலாளராக கடமையாற்றிய எம்.எம் ஆஸீக் சாய்ந்தமருது பிரதேச செயலாளராக பதவி உயர்வு பெற்று இன்று (08) தனது கடமைகளை சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். இவருக்கான நியமனம் அரச சேவைகள் மாகாண சபைகள் உள்ளுராட்சி அமைச்சின் செயலாளரினால் வழங்கப்பட்டது.
இப்பதவியேற்பு நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலக உத்தியோகத்தர்களுடன் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனிபா உட்பட பிராந்தியத்தில் உள்ள இலங்கை நிர்வாக சேவையைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
0 comments :
Post a Comment