கல்முனையில் தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் விளையாட்டு விழா தொடர்பான தெளிவூட்டல்.



றாசிக் நபாயிஸ்-
தேசிய இளைஞர் சேவை மன்றத்தினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற தேசிய இளைஞர் விளையாட்டு விழாவின் முதற் கட்டமான பிரதேச இளைஞர் விளையாட்டு விழா எதிர்வரும் (2021.03.25) ஆம் திகதி முதல் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .
இதற்கமைய குறித்த விளையாட்டுப் போட்டியின் நிகழ்நிலை (Online) பதிவு மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கல் தொடர்பான கலந்துரையாடல் கல்முனை பிரதேச செயலக பிரிவில் பதிவு செய்யப்பட்ட இளைஞர் கழகங்களுக்காக தெளிவூட்டல் நிகழ்வு கல்முனை பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் பிரதேச செயலக இளைஞர் சேவை அதிகாரி எ.எல்.எம்.அஸீம் தலைமையில் (18) இடம் பெற்றது.
அம்பாறை மாவட்டத்தில் விளையாட்டுத் துறையில் ஈடுபடுகின்ற இளைஞர்களின் திறமைகளை இனங்கண்டு மேலதிக பயிற்சி வழங்குவதற்கான நேர்முகப்பரீட்சை தேசிய இளைஞர் சேவை மன்றத்தினால் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (19) காலை 8.30 மணியளவில் அம்பாறை வீரசிங்க விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான அறிவுறுத்தல்களும் இதன் போது வழங்கப்பட்டமை இங்கு
குறிப்பிடத்தக்கது.
இதன் போது அம்பாறை மாவட்ட இளைஞர் சேவை உத்தியோகத்தர் ஏ.முபாறக் அலி, கல்முனை பிரதேச
இளைஞர் பாரளுமன்ற உறுப்பினரும்
கல்முனை பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் உபதலைவருமான எ.எல்.எம். அஸ்கி, கல்முனை பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் தலைவர் ஆர்.எம்.ஜெஸார், அம்பாறை மாவட்ட இளைஞர் சம்மேளன உப செயலாளர் எ.பி.எம் சிம்சார், கல்முனை பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் ஊடக மற்றும் தகவல் பிரிவு இணைப்பாளர் எம்.என்.எம்.அப்ராஸ், இளைஞர் கழகத்தின் நிர்வாக உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதே வேளை கல்முனை பிரதேச செயலக பிரிவின் இவ்வாண்டுக்கான இளைஞர் விளையாட்டு விழா எதிர்வரும் மார்ச் 25 ஆம் திகதி தொடக்கம் ஏப்ரல் 04 ஆம் திகதி வரை இடம் பெறவுள்ளதுடன்
இப்போட்டிகள் யாவும் கல்முனை
சாந்தான்கேணி ஐக்கிய விளையாட்டு மைதானம் மற்றும் கல்முனை கடற்கரை பகுதிகளில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :