சர்வதேச மகளீர் தினத்தை முன்னிட்டு திருக்கோவில் பிரதேச செயலகத்தில் சிறப்பானதொரு மகளிர்தினவிழா நடைபெற்றது.
திருக்கோவில் பிரதேச செயலக மகளீர் அபிவிருத்தி உத்தியோகத்தர்
திருமதி.கலைவதனிதிலீபனின் ஏற்பாட்டின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டது.
திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் தலைமையில் திருக்கோவில் பிரதேச செயலக ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சிவன் அருள் பெளண்டேசன் தலைவர் கலாநிதி அனுசியாசேனாதிராஜா செயலாளர் வி.வாமதேவன் திருக்கோவில்பொலிஸ்நிலைய சிறுவர் பெண்கள் பொறுப்பதிகாரி மு.விஜிதா மற்றும் திருக்கோவில் பிரதேச செயலகநிருவாக உத்தியோகத்தர் திருமதி.ஜெயசுந்தரி கணேசராசா மகளிர்அபிவிருத்தி உத்தியோகத்தர் ரி.கலைவதனி திருக்கோவில் பிரதேச செயலக கிராம சேவை நிருவாக உத்தியோகத்தர் எஸ்..பரிமளவாணி மற்றும் காணிப்பிரிவு நிருவாக உத்தியோகத்தர் மு.லோஜினி கிராம உத்தியோகத்தர் இ.ராசரெட்ணம் உளவளத்துனை உத்தியோகத்தர் ரிசிலோஜினி மகளீர் அபிவிருத்தி கள உத்தியோ கத்தர். றாசிதா அனஸ் ஆகியோர் இன் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
மேலும் நிகழ்வில் தென்கிழக்கு பல்கலைக்கழக கலாநிதி .அனுஷியா உளவளத்துனை உத்தியோகத்தரால் கெளரவிக்கப்பட்டார்.
மேலும் திருக்கோவில் பிரதேச செயலகத்தின் நிருவாக உத்தியோகத்தர் திருமதி.ஜெ.கணேசராசா அவர்களை திருக்கோவில்-பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி .கலைவதனி தீலீபன் பொன்னாடை போர்த்தி கெளரவித்தார்.
மேலும் நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு நினைவுச்சின்னங்களும் வழங்கிவைக்கப்பட்டது.
0 comments :
Post a Comment