இன்று (20.03.2021) அம்பாறை நகர மைதானத்தில் இடம் பெற்ற அம்பாறை மாவட்ட மெய்வல்லுனர் விளையாட்டு நிகழ்ச்சியில் அட்டாளைச்சேனை பிரதேசத்திற்கு 9 தங்கப்பதக்கங்களும் , 12 வெள்ளிப்பதக்கங்களும், 5 வெண்கலப் பதக்கமும் கிடைத்துள்ளது.
400m, 1500m , 110m தடைதாண்டல், 400m தடைதாண்டல் ,நீளம் பாய்தல், முப்பாய்ச்சல், ஈட்டி எறிதல்,
4*400m , 4*100 போன்ற போட்டி நிகழ்ச்சிகளில் தங்கப்பதக்கத்தை சுவீகரித்துள்ளனர். இதன் மூலம் அம்பாறை மாவட்ட தடகள சாம்பியனாக அட்டாளைச்சேனை வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு மாகாண மட்ட போட்டிக்கு அனைவரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
0 comments :
Post a Comment