அரசியல் கட்சிகளை பதிவு செய்யும் போது, கட்சிகளின் பெயர்களுக்கு இனம் மற்றும் மதங்களை அடிப்படையாகக் கொண்ட பெயர்களை வைக்கக்கூடாது என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது..
மதம் மற்றும் இனங்களை அடிப்படையாகக் கொண்ட கட்சிகளை பதிவு செய்யாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு கூறுகின்றது.
தற்போது காணப்படுகின்ற சட்டத்திற்கு அமைய, அரசியல் கட்சிகளை பதிவு செய்யும் போது தேசிய கட்சியாக மாத்திரமே பதிவு செய்ய தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு குறிப்பிடுகின்றது.
ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் நேற்றைய தினம் கூடி, ஆராய்ந்த போதே இந்த தீர்மானத்தை எட்டியுள்ளனர்.
தற்போது பதிவு செய்யப்பட்டுள்ள ஏற்றுக்கொள்ளக்கூடிய கட்சிகளின் பெயர்கள் இனம் மற்றும் மதங்களை அடிப்படையாகக் கொண்டு காணப்படுமாக இருந்தால், அந்த பெயர்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான அறிவிப்பு விடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.
அவ்வாறான கட்சிகளின் பெயர்களை மாற்றுவதற்கான கால எல்லையொன்றும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டள்ளது..
0 comments :
Post a Comment