சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை செய்து எங்களுக்கு பரிகாரம் கிடைக்க கூடியவாறு முஸ்லீம் தலைவர்களின் கருத்துக்கள் அமைய வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டம் பாண்டிருப்பு பகுதியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இன்று மாலை இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது
வடகிழக்கில் தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள தேசத்தில் கட்டவிழ்த்து விடப்பட்ட ஒரு இன அழிப்பு யுத்தமானது இரண்டு சமூகங்களையும் முற்றுமுழுதாக பாதித்திருக்கின்றதுஎங்களுடைய ஆரம்ப காலகட்டத்தில் ஒரு ஜனநாயக போராட்டம் இருந்தது.
ஜனநாயக போராட்ட ரீதியாக நாங்கள் பெற்றுக் கொள்ள எமது மக்களுடைய அரசியல் அபிலாசைகளை அணுகுகின்ற போது அதற்கு இந்த நாட்டில் மாறி மாறி வந்த அரசுகள் அதற்குரிய அனுமதியை அளிக்கவில்லை.
மாறாக எங்கள் மீது மேலும் மேலும் அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டிருந்தார்கள்.
அதனைத் தொடர்ந்து எங்களுடைய தமிழ் மக்கள் கைகளில் ஆயுதம் ஏந்தி போராடி இருந்தார்கள்.
இந்த போராட்டத்தின் போது பல்வேறு விதமான நெருக்கடிகள் இருந்து இரண்டு சமூகங்களுக்கிடையில் வந்தது.
எங்களுடைய நிலைப்பாட்டை தமிழ் தலைவர்களும் முஸ்லிம் தலைவர்களும் நன்கு விளங்கிக் கொள்ள வேண்டும்.எங்களுடைய ஆயுதப் போராட்டத்தின் போது அதை வழிநாத்திக் கொண்டிருந்த தமிழ் தேச தலைவர் அவர்கள்
எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் முஸ்லிம் மக்களை ஒதுக்குகின்ற விதமாகவோ அவருடைய நடவடிக்கைகள் இருந்ததில்லை.அம்முஸ்லிம் மக்களை பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் நகர்வுகள் கடந்த காலங்களில் இருந்தது.
அந்த அடிப்படையிலேயே எங்களை பொறுத்தமட்டில் தமிழ் பேசுகின்ற மக்கள் வடக்கு கிழக்கில் முஸ்லிம்களும் தமிழர்களும் ஒன்றிணைந்து இந்த வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டு தமிழ் பேசும் மக்களுடைய மரபுவழி தாயகம் அங்கீகரிக்கப்பட்டு அதில் ஒற்றுமையாக முஸ்லீம் மக்களுக்கான ஒரு அதிகார பகிர்வை கொடுத்து நாங்கள் இரு இனங்களும் வடக்கு கிழக்கு தாயக தேசத்திலே ஒற்றுமையாக வாழ கூடிய ஒரு சூழ்நிலை ஏற்படுத்த போராட்டம் அமைந்திருந்தது.
அந்த அணுகுமுறை செயற்பாட்டினையே நாங்கள் தற்போதும் முன்னெடுத்துள்ளோம்.
தமிழ் முஸ்லிம் மக்களைப் பொறுத்தமட்டில் ஒரு விஷயத்தை நன்கு விளங்கிக்கொள்ள வேண்டும். இந்த நாட்டிலே பெரும்பான்மையான உள்ள சிங்கள தேசம் எமது இரு சமூகத்தையும் மூட்டி விட்டு அடிபட வைத்து ஒற்றுமையில் இருந்து கலைப்பதற்கான நிறைய முகவர்களை வைத்து கிழக்கில் வைத்து செயற்பட்டார்கள்.
வடக்கிலும் இந்த நிலைப்பாடு இருந்தது.ஆனால் புத்திஜீவிகளும் சமயத்தலைவர்களும் நன்கு ஒரு விடயத்தை விளங்கிக்கொள்ள வேண்டும். சிங்கள தேசம் நிச்சயமாக இலங்கை தீவை நிச்சயமாக சிங்கள பௌத்த நாடாக மாற்றுவதற்கு கங்கணங்கட்டிக் கொண்டிருக்கிறது.அவர்களுடைய செயற்பாடுகளும் அவ்வாறு தான் உள்ளது. தமிழர்கள் வளர்ந்தால் கல்விலோ அல்லது பொருளாதாரத்திலோ வந்து அடிக்கிறார்கள் .அதே போன்று முஸ்லிம் சமூகம் அந்த மக்கள் பொருளாதார ரீதியாக வளர்ந்து வருகின்ற போது அடித்து நொறுக்குகின்றார்கள்.
இது கடந்த காலங்களில் நடைபெற்று இருக்கின்றது.எனவே எங்களை பொறுத்தமட்டில் தமிழ் தலைவர்களும் முஸ்லிம் தலைவர்களும் ஒரு நல்லிணக்கத்திற்குள் வர வேண்டும்.நாங்கள் எங்களுடைய தமிழ் பேசுகின்ற நிலப்பரப்பை பாதுகாக்க வேண்டும்.இந்த பாதுகாப்பு வந்து இதுவரை தமிழர்களுக்கு நடந்த இனவழிப்பு விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை செய்து எங்களுக்கு பரிகாரம் கிடைக்க கூடியவாறு முஸ்லீம் தலைவர்களின் கருத்துக்கள் அமைய வேண்டும்.
அவ்வாறு எங்களுடன் முஸ்லீம் மக்கள் பக்கபலமாக எங்களுடன் நிற்கின்ற பட்சத்தில் நிச்சயமாக இலங்கை தீவில் தமிழ் பேசுகின்ற மக்கள் தமிழ் தேசம் மலரும்.இந்த இலங்கைத் தீவில் முஸ்லீம் மக்களும் சிங்கள மக்களும் தமிழ் மக்களும் சம உரிமையுடன் எவ்விதமான பாகுபாடும் இல்லாமல் வாழ கூடிய சூழ்நிலை ஏற்படும்.அவ்வாறான நகர்வுகளை இந்த தலைவர்கள் முன்னெடுக்க வேண்டும் என்பது தான் எமது நிலப்பாடு ஆகும். எங்களுடைய அரசியல் நகர்வினை பொறுத்தமட்டில் எங்களுடைய தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் எங்களுக்கு பாராளுமன்ற அங்கீகாரம் கிடைக்காத பட்சத்தில் கூட ஜெனிவா கூட்டத்தொடரில் கலந்து கொண்டிருந்தார் .அந்த கூட்டத்தில் கூட மீண்டும் மீண்டும் முஸ்லீம் மக்களுக்கு நடக்கின்ற அநியாயங்களையும், நிலைப்பாடுகளையும் பல தடவை எடுத்து கூறி இருக்கின்றார்.
பாராளுமன்றத்தில் கூட முதல் நாள் திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் பாதுகாப்பு சபை நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் காத்திரமாக விவாதம் ஒன்றினை செய்திருந்தார். இதன் போது பாராளுமன்றத்தில் இருந்த சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்கள் திகைத்து போனார்கள்.அந்த அளவிற்கு இரு சமூகத்தையும் விட்டு கொடுக்காமல் அவர் தொடர்ச்சியாக பேசி வருகின்றார்.அதற்கு பிறகு தான் ஏனையவர்கள் கதைத்து இருக்கலாம்.ஜனாசா எரிப்பில் கூட திரு கஜேந்திர குமார் பொன்னம்பலத்தின் ஆக்கபூர்வமான கருத்துக்கள் கேள்விகளும் தற்போதைய நிலைமைக்கு காரணமாகும்.இன்று சர்வதேசம் திரும்பி இருப்பதற்கு காரணமே நாங்கள் விடாப்பிடியாக சிறுபான்மை இனத்திற்கு எதிராக நடந்து கொண்டிருக்கின்ற அநியாயங்களை அந்த அந்த நேரங்களில் உலகத்திற்கு தெரியப்படுத்தியமை ஆகும்.இன்று ஓரளவு ஏனும் தமிழ் முஸ்லீம் மக்களின் பிரச்சினை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது தவிர வேறு எந்த ஒரு விடயமுமில்லை என கூறினார்.
0 comments :
Post a Comment