அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தில் பணியாற்றி, சேவையிலிருந்து ஒய்வுபெற்ற சிரேஷ்ட அதிபரும், வலயக் கல்வி அலுவலக இணைப்பு உத்தியோகத்தருமான ஏ.எல்.கே.முகம்மட் மற்றும் சமாதானக் கல்வி அதிகாரி எஸ்.எல்.எம்.அனஸ் ஆகியோரின் பணியைப் பாராட்டிக் கௌரவிக்கும் சேவைநலன் பாராட்டு விழா, அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
பிரதிக் கல்விப் பணிப்பாளர் (நிர்வாகம்) ஏ.ஜி.பஸ்மில் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.காசிம் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.
நிகழ்வில், ஓய்வுநிலை உத்தியோகத்தர்கள் ஏ.எல்.கே.முகம்மட், எஸ்.எல்.எம்.அனஸ் ஆகியோர் பொன்னாடை போர்த்தி, வாழ்த்துப் பா, நினைவுப் பரிசு, பொற்கிழி வழங்கி பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.
பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள் (கல்வி அபிவிருத்தி) எம்.எம்.சித்தி பாத்திமா, (முகாமைத்துவம்) பீ.எம்.வை.அறபாத், கணக்காளர் கே.லிங்கேஸ்வரன், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், அக்கரைப்பற்று ஆசிரியர் வாண்மை நிலைய முகாமையாளர் ஏ.எல்.சமீம், நிர்வாக உத்தியோகத்தர் ஏ.எம்.றிம்ஸான், கோட்டக்கல்வி அதிகாரிகள், ஆசிரிய ஆலோசகர்கள், கல்விசார் , கல்வி சாரா உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
0 comments :
Post a Comment