ஆத்திமுனை கிராமியபால அடிக்கல்நடுவிழாவில் முஷரப் எம்.பி.
வி.ரி.சகாதேவராஜா-இலங்கையில் இனவாதம் என்பது வாக்குகளைப்பெற உதவலாமே தவிர நாட்டைக் கட்டியெழுப்ப ஒருபோதும் உதவாது.
இவ்வாறு பொத்துவில் ஆத்திமுனை கிராமியபால அடிக்கல்நடுவிழாவில் பேசிய அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷரப் தெரிவித்தார்.
'இதயங்களை இணைக்கும் கிராமிய பாலம்' என்ற அரசாங்கத்தின் 5000 சிறிய பாலங்களை அமைக்கும் திட்டத்திற்காக பொத்துவில் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட வேண்டிய 20 பாலங்களில் முதலாவது பாலமான பொத்துவில் கோலாவின் ஆற்றுக்கு குறுக்காகச்செல்லும் ஆத்திமுனை பாலத்தின் நிர்மாணப்பணிகள் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷரப் கலந்து கொண்டார்.
நிகழ்வில் விஷேட அதிதிகளாக பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் எம்.எச்.அப்துல் றஹிம் மற்றும் பொத்துவில் பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் வை. றாசித் ஆகியோர் கலந்து கொண்டனர்..
அங்கு அவர் மேலும் பேசுகையில்:
இனங்களுக்கிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதற்கு நாம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றோம். அதன் ஒரு அங்கமாக இங்கு பாலத்திற்கான முதல்கல்லை இரு சமயதலைவர்களும் இணைந்து நட்டார்கள். இலங்கையின் எதிர்கால அரசியலில் எது நிகழவேண்டுமோ அது இங்கு நடந்திருக்கிறது.இது அந்த நல்லிணக்கததிற்ககு கட்டியம் கூறும் செய்தியாக இருக்கட்டும். என்றார்.
சிறப்பு அதிதிகளாக சிங்கபுர விகராதிபதி வண. உபானன்த தேரர் பொத்துவில் ஜம்மியத்துல் உலமா தலைவர் ஏ. ஆதம்லெப்பை மௌலவி பொத்துவில் பிரதேச பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிஷாந்த குமார திசாநாயக்க பொத்துவில் பிரதேச சபையின் உப தவிசாளர் பி.பார்த்தீபன் பொத்துவில் பிரதேச சபையின் உறுப்பினர்களான என்.எச். முனாஸ் ஏ.பி. சதகதுல்லாஹ் எம்.எச்.எம். ஜமாகிம் எம்.எஸ்.எம். மர்சூக் எம்.ஏ. பக்குர்தீன் எம்.. ஜுனைதா ஏ. ஆயிஷா மற்றும் பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர் வை.எல்.நியாஸ் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
அத்தோடு வீதி அபிவிருத்தி அதிகார சபையைப் பிரதிநிதித்துவப்படுத்தி சிரேஷ்ட பொறியியலாளர் அலியார் செயற்பாட்டு பொறியியலாளர் இஸ்மாயில் பாலம் தொடர்பான பொறியியலாளர் அமிர்தலிங்கம் சிரேஷ்ட தொழினுட்ப உத்தியோகத்தர் றஹிம் மற்றும் தொழினுட்ப உத்தியோகத்தர் நவாஸ் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் போது ஆத்திமுனைப் பிரதேச மக்கள் கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment