சர்ஜுன் லாபீர்-
"நாடும் தேசமும் உலகமும் அவளே" எனும் மகுட வசகத்தினை அடிப்படையாகக் கொண்டு உலகம் பூராகவும் கொண்டாடப்படும் 110வது சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு கல்முனை பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யபட்ட சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் இன்று(மார்ச்-8) பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.எம் சிபாயா தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை பிரதேச செயலாளர் ஜெ.லியாகத் அலி கலந்து கொண்டு சிறப்பித்தார்.
மேலும் இந்நிகழ்வில் உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர், நிர்வாக உத்தியோகத்தர் எம்.என்.எம் றம்சான்,சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலீஹ்,கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ.எம் முஹ்ஹரப்,பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் திருமதி ஜனூபா நெளபல்,உட்பட பிரதேட செயலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment