எதிர்வருகின்ற மாகாண சபைத் தேர்தலில் எமது கட்சியும் மக்கள் பிரதிநிதித்துவத்தை பெறும் என்பதில் எந்தவிதமான சந்தேகங்களும் இல்லையென தேசிய விடுதலை மக்கள் முண்ணனியின் தலைவர் முஸம்மில் மொஹிதீன் தெரிவித்தார்.
திருகோணமலை முள்ளிப்பொத்தானையில் அமைந்துள்ள கட்சியின் காரியாலயத்தில் இன்று(19) காலை நடைபெற்ற பிரதேச அமைப்பாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்:
இவ்வருடம் மாகாண சபை தேர்தல் நடைபெறுமானால் தேசிய விடுதலை மக்கள் முன்னணி மூலம் கிழக்கில் வரலாறு பேசவைப்போம், அதற்கான சிறந்த ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றோம்.
பணத்தால் வாங்கும் அரசியலை விட குணத்தால் வெற்றி பெறும் அரசியலே மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் என்பதை நிரூபித்து காட்டுவோம்.
மாற்று அரசியல் கட்சிகளை விடவும் எமது கட்சி வித்தியாசமானது.
ஆதலாம் எமது கட்சிக்கு மக்கள் வாக்களித்து ஆதரவினை வெளிக்காட்டுவார்கள் என்றார்.
0 comments :
Post a Comment