மேல் கொத்மலை நீர்தேகத்திலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு



க.கிஷாந்தன்-
லவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் கொத்மலை நீர்தேகத்திலிருந்து 25.03.2021 அன்று பெண்ணின் சடலம் ஒன்று காலை 09.00 மணியளவில் மீட்கப்பட்டதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவத்தனர்.

சடலமொன்று மிதப்பதைக்கண்டு பிரதேசவாசிகள் தலவாக்கலை பொலிஸருக்கு அறிவித்துள்ளனர். அதன்பின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட பெண் நீரில் அடித்துக் கொண்டு வந்து உயிரழந்தாரா அல்லது நீர் தேக்கத்தில் பாய்ந்து உயிரிழந்தாரா அல்லது எவராவது கொலை செய்து நீர்தேக்கத்தில் எரிந்து சென்றார்களா என்பது தொடர்பாக பலகோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மீட்கப்பட்ட சடலம் இதுவரை யாருடையது என அடையாளம் காணப்படவில்லை. சுமார் 30ற்கும் 35ற்கும் இடையிலான வயது மதிக்கதக்க பெண் எனவும் மேலதிக விசாரணைகளை தொடர்வதாகவும் தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :