பயமறியாள் நிகழ்ச்சி - பரிசு வழங்கும் விழா ! கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் சென்னையில் நடைபெற்றது.



ர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, தேசிய மாணவர் அமைப்பான கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மாணவிகள் சார்பில் " பயமறியாள் " என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி , ஓவியப்போட்டி மற்றும் அறிவுத்திறன் சார்ந்த போட்டிகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது.
இப்போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி இன்று சென்னையில் கேம்பஸ் ஃப்ரண்ட் மாநில தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு தென்சென்னை மாவட்ட மாணவிகள் பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஜைனப் அல் கதீஜா தலைமை தாங்கி வரவேற்றார்.

மாநில தலைவர் அஷ்ரப், மாநில செயற்குழு உறுப்பினர் அனீஸ் ஃபாத்திமா ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினர்.

இறுதியாக உறுப்பினர் ஜஹ்ரா நன்றி கூறினார். நிகழ்ச்சியில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 17 மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :