பூநகர் ஈச்சிலம்பற்று பகுதியைச் சேர்ந்த தனது கணவரை மீட்டுத்தருமாறு மனைவி கோரிக்கை.



எப்.முபாரக்-
திருகோணமலை பூநகர் ஈச்சிலம்பற்று பகுதியைச் சேர்ந்த தனது கணவர் இம்மாதம் 09ஆம் திகதி கொழும்புக்கு கூலி வேலைக்குச் சென்ற நிலையில் 13ஆம் திகதி மாலையிலிருந்து எந்தத் தொடர்புமற்ற நிலையில் உள்ளதாக கண்ணீர் மல்க மனைவி தெரிவித்தார்.

இவ்வாறு காணாமல் போனவர் 6 மற்றும் 1 1/2 வயதுகளையுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான 1991.11.15ஆம் திகதி பிறந்த துறைசிங்கம் சஹிந்தன் எனும் இளம் குடும்பஸ்தர் ஆவார்.இவர் குடும்ப கஷ்ட நிலமை காரணமாக கொழும்புக்கு கூலி வேலைக்குச் சென்றுள்ளார். இந்நிலையில் அவர் அங்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு குருந்துவத்த பொலிஸில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டதாக சேருநுவர பொலிஸார் தன்னிடம் தெரிவித்ததாக மனைவி தெரிவித்தார்.

இவ்வாறு மனநலம் பாதிக்கப்பட்ட தனது கணவரை வைத்தியசாலையிலோ அல்லது சேருநுவர பொலிஸுக்கோ தனக்கோ அறிவிக்காமல் அவரை குருந்துவத்த பொலிஸார் திருப்பி அனுப்பியது கவலையளிப்பதாகவும் அவர் தெரிவித்தார். தனது கணவர் இதற்கு முன்னர் மனநலம் பாதிக்கப்பட்டவர் அல்ல எனவும் 13ஆம் திகதி காலை தன்னிடம் நன்றாகவே பேசியதாகவும் மனைவி தெரிவித்தார். தனது பிள்ளைகளின் எதிர்காலம் கருதி தனது கணவரை மீட்டுத்தர அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கண்ணீர் மல்க அவர் மேலும் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக சேருநுவர பொலிஸாரிடம் கேட்ட போது அவை தொடர்பான தகவல்கள் உரிய நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும்,விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :