இலங்கை மின்சார சபை தலைவரின் ஊடக மாநாடு


அஷ்ரப் ஏ சமத்-

ளனி திஸ்ஸ மின்சார உற்பத்தி நிலையத்தில் உள்ள எரிவாயு ஊடாக மின்சாரத்தினை உற்பத்தி செய்யும் 110 மெஹா வோட் கொண்ட இயந்திரமும் ,டீசல் ஊடாக மின்சாரத்தினை உற்பத்தி செய்யும் மெஹா 55 ஸ்டீம் இயந்திரமும் கடந்த 2019 ஜூலை மாதத்தில் திடிரென பழுதடைந்ததுவிட்டது.

 இதனை உடனடியாக இரு மெசின்களையும் இயக்க வைப்பதற்காகவே இவ்வாரம் மீண்டும் சீனநாட்டு கம்பனியான சீமெக்ஸ் எனும் கம்பனியினா் தற்பொழுது இலங்கை வந்துளளனா் இவா்கள் அடுத்த 11 நாட்களுக்குள் மீள மெசின்களை திருத்தியமைத்து ஏப்ரல் 4ம்திகதி இயக்கவைப்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ளாா்கள். 

 என இலங்கை மின்சார சபையின் தலைவா் பொறியியலாளா் விஜித்த கேரத் தெரிவித்தாா்.

மேற்கண்டவாறு 24ஆம் திகதி கொழும்பில் உள் ள இலங்கை மின்சாரத் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளா் மாநாட்டின்போதே தலைவா் பொறியியலாளா் விஜித்த கேரத் தெரிவித்தாா்.

அவா் தொடா்ந்து அங்கு கருத்து தெரிவிக்கையில் -

கடந்த 2019 ஜலை மாதத்தில் பழுத்தடைந்த மெசின்களை கேள்வி கோரல் மூலம் விளம்பரப்படுத்தப்பட்டு மின்சார அமைச்சின் அங்கிகாரத்துடன் ஓ.ஈ.எம் எனும் உள்ளுா் கம்பனிக்கே மெசினை வெளிநாட்டுக்கு அனுப்பி திருத்தியமைப்பதற்கு பாரப்படுத்தினோம். அதற்கமைவாக கப்பல் மூலம் மெசின்கள் துபாய் நாட்டிற்கும் , இந்தியாவுக்கும் கப்பல் மாா்க்கமாக அனுப்பிவைக்கப்பட்டது. 

கடந்த கால கோரோனா காரமாக இந்த மெசின்கள் கடந்த டிசம்பா் மாதம் மீள் கொண்டுவரப்பட்டு மெசினை மீள இணைக்கும்போது மீண்டும் மெசின்கள் பழுதடைந்துவிட்டது. இதனால் இலங்கை மின்சார சபைக்கு பாரியதொரு நஸ்டம் ஏற்பட்டிருப்பது உண்மை. இதற்கு காரணம் 2019, காலப்பகுதியில் இலங்கை மட்டுமல்ல ஏனைய நாடுடகளிலும் கொவிட் 19 பிரச்சினைக்கும் காலதாமத்ம் இருந்தமையும் குறிப்பிடத்தக்கது. தற்பொழுது கூடிய மழை நீர் கிடைப்பதனால் மின் வெட்டு நடைபெறுவதற்கு சாத்தியமில்லை. எனவும் அவா் தெரிவித்தாா்.

இதனால் குறிப்பிட்ட இந்திய கம்பனியினால் தவருதலாக திருத்தியமைக்கப்பட்டதாலே மெசின்கள் மீள பழுதடைந்துள்ளது. கடந்த கால கொவிட் 19 லொக்டவுன் பிரச்சினையினாலேயே இம் மெசின்கள் இந்தியாவில் இருநதது கொண்டுவருவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த மெசின் மீள பழுதடைந்தமையினால் இலங்கை மின்சார சபைக்கு 650 மில்லியன் ருபா நஸ்டமேற்பட்டது.

இதற்காக இதனை மீள்அமைப்பதற்காக பாரமளிக்கப்பட்ட கம்பனிகளுக்கு இதுவரை மின்சார சபை பணம் எதுவும் செலுத்தவில்லை இது பற்றிய ஒரு விசாரனை குழு அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளது. அதில் மின்சார நிபுணத்துவம் பெற்ற கலாநிதி லீலாநந்த சமரநாயக்க தலைமையில் விசானைக்குழு ஒன்றும் நியமிக்கப்பட்டு குறித்த கம்பணி சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும் விசாரித்து வருகின்றது.

இவ் விடயத்தினை வைத்து இலாங்கை மின்சார சபை முகாமைத்துவம் திருட்டுத்தணமாக பணம் சம்பாதித்தாக சில ஊடகங்கள் அரசியல் ரீதியாக பிரச்சாரம் செய்கின்றன. அதில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை. 

 இலங்கை மின்சார சபையின் பொதுமுகாமையாளா் குமுதினி கேரத், உப தலைவா் நளிந்த இளங்கோ கேரத் ஆகியோா் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்சிவின் ஆலோசனைக்கேட்ப மின்சாரத்தினை நாட்டில் சகல மக்களுக்கும் குறைந்த விலையில் வழங்குவதற்கே பல்வேறு திட்டங்களை முன்எடுத்து வருகின்றனா்.

டீசல் ஊடாக மின்சாரத்தினை உற்பத்தி செய்யும் இயந்திரத்திங்களை இயக்குவதாலேயே இலங்கையில் எரிபொருளுக்காக நாளாந்தம் 30 கோடி ருபாவினை மின்சார சபை இழந்து வருகின்றது . இதனை கேஸ் ஊடாக இயக்கும் அல்லது எல்.எம். ஜி மின்சாரத்தினை இலங்கை உற்பத்தி செய்தால் மின்சார சபையின் செலவினம் அரைவாசியாகக் குறைந்து விடும் அதற்காக ஜனாதிபதி அவா்கள் அத்திட்டங்களை ஆரம்பிப்பதற்காகவே அமைச்சுக்கு அனுமதி தந்துள்ளாா் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவா்கள் ஆட்சிக் காாலத்தில் நுரைச்சோலையில் அனல் மிண்சாரத்தினை ஏற்படுத்திதானலேயே மின்சார சாதாரண விலைக்கும் பொதுமக்களுக்கு வழங்கமுடிந்துள்ளது. கடந்த கால நல்லாட்சியில் எவ்வித மின்சார புதிய திட்டங்கள் ஆரம்பிக்கப்படவில்லை.

50 பேர்ச் காணியில் உள்ள பிரதேசத்தில் நிலத்தின் கீழ் சூரிய வெளிச்ச மின்சாரம் உற்பத்தி செய்வதற்கும் அதனுடாக 1 இலட்சம் குடும்பங்களும் குறைந்த விலையில் மிள்சாரம் வழங்குவதற்கான திட்டம் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்பட உள்ளது. அத்துடன் மின்சார சபையினால் சமுாத்தி அதிகாரிகள் ஊடாக மின்சார வயா் இணைப்பினை வீடுகளுக்கு அமைத்தும் இணைப்புக்களை குறைந்த விலையில் வழங்குவதற்கும் மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. 23 ருபாவுக்கு மின்சாரத்தினை பெற்று 16 ருபாவுக்கே விற்கின்றோம். 

12 இலட்சம் குடும்பங்களுக்கு ஒர் மின்சார அலகினை ரு. 3.50 சதத்திற்கும் மேலும் 12 இலட்சம் குடும்பங்களுக்கு ஒர் அலகினை ருபா 5.50 சதத்திற்கும் வழங்குகின்றோம். ஆகவே தனா் 600 மெகஹா வோட் எல்.எம். ஜி கேஸ் ஊடாக உற்பத்தி செய்யும் இயந்திரத்தினை மாற்றுவதற்கு ஜனாதிபதியுடனும் வெளிநாடுகளுடனும் பேசி வருகின்றோம் என தலைவா் தெரிவித்தாா்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :