கிண்ணியா பிரதேசத்தில் புதிதாக பொலிஸ் நிலையம் ஒன்றை அமைப்பதற்கு பரிசீலிக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திப் பிரிவின் பணிப்பாளரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட சில கிராம சேவையாளர் பிரிவுகள் கிண்ணியாவின் எல்லைப்புறத்தில் இருக்கின்ற வான்ஆறு பொலிஸ் பிரிவுடன் இணைக்கப்பட்டிருக்கிறது.
இதன் காரணமாக நீதிமன்ற நடவடிக்கைக்காக கந்தளாய் நீதிமன்றுக்கு செல்ல வேண்டியிருப்பதால் மக்கள் பல்வேறு அசெளகரியங்களைச் சந்தித்து வருகின்றனர்.
எனவே இவற்றை நிவர்த்தி செய்வதற்காக கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட 07 கிராம சேவையாளர் பிரிவுகளை உள்ளடக்கி புதிய பொலிஸ் நிலையம் ஒன்று உருவாக்கப்பட வேண்டுமென சம்பந்தப்பட்ட தரப்பினரை கிண்ணியா சூறா சபை கோரியிருந்தது.
இது தொடர்பாக விரைவாக நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸ் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திப் பிரிவின் பணிப்பாளரால் கிண்ணியா சூறா சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment