எஸ்.எம்.எம்.முர்ஷித்-
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓட்டமாவடி பகுதியில் வைத்து போலியான ஐயாயிரம் ரூபாய் நாணயத்தாள்களுடன் சந்தேக நபர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.
வாழைச்சேனை கடதாசி ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து வாழைச்சேனை விஷேட அதிரடிப் படையினருடன் இணைந்து மேற்கொண்ட சுற்றி வலைப்பு நடவடிக்கையில் போது போலியான நாணயத்தாள்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஓட்டமாவடி பிரதேசத்திலுள்ள வியாபார நிலையம் ஒன்றினை சோதனை செய்த போது ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான ஐயாயிரம் ரூபாய் போலி நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், வியாபார நிலையத்தில் கடமையாற்றிய இளைஞர்; ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இப்பிரதேசத்தில் இன்னும் போலி நாணத்தாள்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்திலும், இதனுடன் தொடர்புபட்ட வியாபாரிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் சில வர்த்தக நிலையங்கள் சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும், போலி நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்ட வர்;த்தக நிலையத்தின் உரிமையாளர் தலைமறைவான நிலையில் வர்த்தக நிலையத்தில் கடமையாற்றிய இளைஞரே கைது செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெறுவதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.
அண்மையில் வாழைச்சேனை இராணுவப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் நிந்தவூர்ப் பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையிலேயே ஓட்டமாவடியில் மேற்படி சுற்றிவலைப்பு இடம்பெற்றதாக வாழைச்சேனை விஷேட அதிரடிப் படையினர் தெரிவித்தனர்

0 comments :
Post a Comment