ஜக்கிய சமூக முன்னனியின் செயற்திட்டங்கள் ஆரம்பமாகின !!



நூருள் ஹுதா உமர்-
க்கிய சமூக முன்னணியின் செயற்திட்டங்களை ஆரம்பித்து வைப்பதற்காக அது சம்பந்தமான கலந்துரையாடல் ஜக்கிய சமூக முன்னணியின் தலைவரும், முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினருமான அ.கபூர் அன்வர் தலைமையில் சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.

இக் கலந்துரையாடலின் போது இளைஞர் கழகங்களில் இருக்கின்ற இதுவரை தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் வழங்கப்படுகின்ற அடையாள அட்டை பெறாத இளைஞர் யுவதிகளுக்கு இலவசமாக அடையாள அட்டை பெற்றுக் கொடுத்தல், வறிய பாடசாலை 50 மாணவர்களுக்கு பாடசாலை உபகரணம் வழங்கள், முதற்கட்டமாக 50 இளைஞர் யுவதிகளுக்கு சுகாதார விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்துதல், எதிர்வரும் புனித நோன்பை முன்னிட்டு பள்ளிவாசல்களை சுத்தம் செய்தல், ஜனாசா குளிப்பாட்டல் விழிப்புணர்வு கருத்தரங்கை செய்தல் போன்ற வேலைத் திட்டங்களை எதிர்வரும் நாட்களில் தொடர்ச்சியாக செய்வது என தீர்மாணிக்கப்பட்டது.

இக் கலந்துரையாடலில் முன்னணியின் செயலாளர் எம்.எஸ். இம்தியாஸ் மற்றும் முன்னணியின் அமைப்பாளரும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தேசிய சம்மேளன பிரதிநிதியுமாகிய அஸ்லம் சிப்னாஸ் மற்றும் கிராம சேவக பிரிவுகளின் இணைப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :