கிராமத்திற்கு ஒரு மைதானம் எனும் செயற்திட்டத்தின் கீழ் நாடுமுழுவதிலும் 332 மைதானங்களை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தின் படி கல்முனை கடற்கரை வீதியில் அமைந்துள்ள கடற்கரை மைதான அபிவிருத்தி தொடர்பில் ஆராயும் கள விஜயம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதித்தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தலைமையில் இடம்பெற்றது.
இந்த விஜயத்தின் போது கல்முனை பிரதேச செயலக செயலாளர் ஜே. லியாக்கத் அலி, கல்முனை பிரதேச செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் எம். ஜௌபர், கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம். பைரூஸ், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பு செயலாளர் நௌபர் ஏ பாபா உட்பட பலரும் நேரடியாக விஜயம் செய்து மைதானத்தின் தற்போதைய நிலைகளை ஆராய்ந்தனர்.
கல்முனை கடற்கரை மைதான உள்ளக ஆடுகள அபிவிருத்தி, மைதானத்தை ஒளியூட்டும் நடவடிக்கை, பார்வையாளர் அரங்க புனரமைப்பு உட்பட பல்வேறு வேலைத்திட்டங்களை செய்வதற்கான தீர்மானம் இந்த கள விஜயத்தின் போது எடுக்கப்பட்டுள்ளதுடன் விரைவில் வேலைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment