ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்சவின் சௌபாக்கிய நிகழ்ச்சித் திட்டத்திற்கு அமைய காரைதீவு பிரதேச செயலக சமுர்த்தி பிரிவினால் புள்ளிகள் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிக்கு உத்தியோகபூர்வமாக வீடு கையளிக்கப்பட்டதுடன், 10 சமுதாய அமைப்புகளுக்கு தலா 50 ஆயிரம் ரூபா பெறுமதியான "அறநெழு " கடனுக்கான காசோலையும், தெரிவு செய்யப்பட்ட சில பயனாளிகளுக்கு வாழ்வாதார கடன் உதவியும் பிரதேச செயலாளர் திரு சிவஞானம் ஜெகராஜனி ன் தலைமையில் திங்களன்று (08) கரடி தோட்ட சமுர்த்தி வங்கியில் வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் சமுர்த்தி தலைமை பிட முகாமையாளர் எம்.எம் அச்சு முஹம்மட், சமுர்த்தி முகாமையாளர் எ.எல்.எம்.ஹமீட், கரடி தோட்ட வங்கி முகாமையாளர் கே.சத்தியபிரியன், திட்ட முகாமையாளர் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என கலந்துகொண்டார்கள்
0 comments :
Post a Comment