கிழக்குமாகாண உடல்கட்டழகு போட்டியில் காரைதீவுஇளைஞர் தெரிவு

வி.ரி.சகாதேவராஜா-

கி
ழக்கு மாகாண ஆண்களுக்கான உடல்கட்டழகு போட்டியில் அம்பாரை மாவட்டம் சார்பாக போட்டியிட்ட காரைதீவு பிரதேச இரு வீரர்களும் பதக்கம் வென்றனர்.

ஞானேந்திரன் தமிழ்செல்வன் 90 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கமும் மோகன் றிச்சன் 70 கிலோ எடைப் பிரிவில் வெங்கல பதக்கமும் பெற்றனர்.

அம்பாறை மாவட்டத்திலிருந்து சென்ற குழுவில் இவர்கள் இருவருமே தமிழ் போட்டியாளர்களாவர் என்பதும் இவர்கள் முதல்தடவையாக பங்கேற்றமையும் குறிப்பிடத்தக்கது.

கிழக்கு மாகாண விளையாட்டுத்திணைக்களம் திருகோணமலையில் நேற்றுமுன்தினம்(6) சனிக்கிழமை கிழக்குமாகாண உடல்கட்டழகு போட்டி நடைபெற்றது.

அப்போட்டி உடல்நிறையைக்கருத்திற்கொண்டு 5 பிரிவுகளாக நடாத்தப்பட்டன. அம்பாறை மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை ஆகிய 3 மாவட்டங்களிலிருந்து போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.

மாகாணமட்டபோட்டியில் முதலிரு இடங்களைப்பெற்றவர்கள் தேசியமட்டப்போட்டியில் பங்குபற்றத் தகுதிபெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :