இலங்கை உட்பட சர்வதேசநாடுகள் பலவற்றில் ஸ்தம்பிதமடைந்திருந்த WhatsApp, மற்றும், Instagram ஆகிய சமூக ஊடக செயலிகள் வழமைக்கு திரும்பியுள்ளன.
இலங்கை உட்பட சர்வதேசநாடுகள் பலவற்றில் Facebook WhatsApp, Facebook Messenger,Instagram ஆகிய சமூக ஊடக செயலிகளில் நேற்று இரவு தீடீர் செயலிழப்பு ஏற்பட்டுள்ளது.
குறித்த சமூக ஊடக செயலிகள் நேற்று திடீர் ஸ்தம்பிதமடைந்திருந்த நிலையில் செயலிகளுக்குள் பிரவேசித்தல் மற்றும் அவற்றினை செயற்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுதொடர்பில் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனாளர்கள் முறைப்பாடு தெரிவித்திருந்ததாகவும் Down Detector, தெரிவித்துள்ளது.
எனினும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே குறித்த செயலிகள் தொழிற்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment