கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியா அமைப்பின் கீழ் சுமார் நான்கு வருடங்களாக இயங்கி வந்த ஓட்டமாவடி - காவத்தமுனை ரஹ்மத் விசேட தேவையுடையோர் பாடசாலையை புதிய நிர்வாகத்திடம் கையளிக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (14) இடம்பெற்றது.
கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியா அமைப்பு கடந்த நான்கு வருடங்களாக நடாத்திவந்த குறித்த பாடசாலையை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக அதனை புதிய குழுவினரிடம் ஒப்படைத்துள்ளதாக அதன் தலைவராக செயற்பட்டு வந்த எஸ்.எச்.அரபாத் ஸஹ்வி தெரிவித்தார்.
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர் எஸ். ஜெயசேகர் முன்னிலையில் குறித்த பாடசாலையை புதிய குழுவினர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இதன் தலைவராக மட்டக்களப்பு மத்தி கல்வி வலய ஆசிரிய ஆலோசகர் எம்.பீ.எம்.சித்தீக், செயலாளராக ஆசிரியர் எம்.ஐ.றனீஸ், பொருளாளராக ஓட்டமாவடி வர்த்தக சங்கத் தலைவர் ஏ.சீ.எம்.நியாஸ், உப தலைவராக மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சேவைகள் மன்ற தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர் ஏ.எம். ஹனீபா, உப செயலாளராக சட்டத்தரணி எஸ்.எம்.சனூஸ் நளீமி ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
0 comments :
Post a Comment