இந்த தண்டனையை 15 வருடங்களில் நிறைவு செய்ய வேண்டும் என கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொடவத்த உத்தரவிட்டுள்ளார்.
அதற்கும் மேலதிகமாக பிரதிவாதிக்கு 10,000 ரூபா தண்டப் பணத்தையும் செலுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் துஷ்பிரயோகத்திற்கு ஆளான சிறுமிக்கு 2 இலட்சம் ரூபாவை நஷ்ட ஈடாக செலுத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.
அந்த நஷ்ட ஈட்டு தொகையை செலுத்த தவறினால் பிரதிவாதிக்கு 5 வருட சாதாரண சிறைத் தண்டனையை வழங்குமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
விளையாடுவதற்காக வந்த அயல் வீட்டு சிறுமியை தனது பிள்ளையை வெளியில் அனுப்பிவிட்டு குறித்த நபர் துஷ்பிரயோகப்படுத்தியுள்ளார்.
இந்த நிலையில் குற்றவாளிக்கு எதிரான 3 குற்றச்சாட்டுக்களில் இரண்டு சந்தேகமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.
மூன்றாவது குற்றச்சாட்டில் இருந்து பிரதிவாதியை விடுவித்து விடுதலை செய்வதாகவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment