இடம்பெற உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தில் இலங்கைக்கு ஆதரவாக முஸ்லிம் நாடுகள் நடந்து கொள்வதாக உள்ளன என்று அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான டபிள்யூ. டி. வீரசிங்க தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கல்முனை தொகுதி பொறுப்பாளரும், கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை பணிப்பாளர் குழு உறுப்பினருமான றிஸ்லி முஸ்தபாவின் ஏற்பாட்டில் காரைதீவு தொடக்கம் கல்முனை கடற்கரை பள்ள்வாசல் வரையிலான 3. 4 கிலோ மீற்றர் கடற்கரை வீதிகளை காபட் வீதிகளாக புனரமைக்கின்ற வேலை திட்டம் மற்றும் சாய்ந்தமருது பௌசி மைதானத்தில் புதிய கரபந்தாட்ட ஆடுகளத்தை நிறுவுகின்ற வேலை திட்டம் ஆகியவற்றுக்கான ஆரம்ப விழா ஞாயிற்றுக்கிழமை இம்மைதானமுன்றலில் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் திலக் ராஜபக்ஸ, காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கி. ஜெயசிறில், பிரதி தவிசாளர் ஏ. எம். ஜாஹிர், உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றியபோது வீரசிங்க எம். பி மேலும் கருத்து தெரிவிக்கையில் எமது இராணுவத்தினர் நாட்டுக்கு பெருமை சேர்த்தவர்கள். இவர்களை மாட்டுவதற்கு ஐ. நா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தில் பகீரத முயற்சிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன. ஆனால் முஸ்லிம் நாடுகள் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டில் உள்ளன. அதற்காக இத்தருணத்தில் நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன்.
பெரமுன அரசாங்கம் மலர்ந்து 06 மாதங்கள்தான் ஆகி உள்ளன. கொரோனா தொற்று நோய் பரம்பல் காரணமாக நாடே ஸ்தம்பித்து உள்ளது. ஆனால் நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றி தந்த வண்ணமே உள்ளது. ஒரு இலட்சம் வேலை வாய்ப்பு திட்டம் போன்றவற்றை உதாரணமாக சொல்ல முடியும் என்றார்
0 comments :
Post a Comment