தீவிரவாதத்துக்கு காரணம் மொழி அல்ல. தமிழ் தீவிரவாதத்துக்கு காரணம் தமிழ் மொழியா? ஜேவிபி தீவிரவாதத்துக்கு காரணம் சிங்கள மொழியா? அரபு பேசுகின்ற சவூதியும் யமனும் சண்டை பிடிக்கின்றனர். இவர்களில் யார் தீவிரவாதி? பிரிட்டனும் அயர்லாந்தும் ஆங்கிலம் பேசும் நாடாக இருந்தும் இரண்டும் ஆயுதத்தால் சண்டை பிடித்தன. ஆகவே தீவிரவாதத்துக்கும் மொழிக்கும் சம்பந்தம் இல்லை. ஒவ்வொரு சமூகமும் அடுத்த சமூகத்தவர் விடயங்களில் மூக்கை நுழைக்காமல் ஒருவரை ஒருவர் மதித்து வாழ்ந்தால் தீவிரவாதத்தை இலகுவாக ஒழிக்கலாம் என என உலமா கட்சி தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் , கடந்த ஆட்சியாளர்கள் இலங்கையில் அரபு மொழியை காட்சிப்படுத்துவதை தடை செய்தனர். ஆனால் ஜனாதிபதி கோட்டா தலைமையிலான ஆட்சி சிங்களவர்களை அதிகமாக கொண்ட புலனாய்வு பிரிவினருக்கும் அரபு மொழி கற்றுக்கொடுக்க வேண்டும் என்கிறது இதுதான் முட்டாள் ஆட்சிக்கும் திறமையானவராக உள்ள ஜனாதிபதி கோட்டா தலைமையிலான ஆட்சிக்கும் இடையிலான வித்தியாசமாகும்
கடந்த ஆட்சியின் போது பல தடவை உலமா கட்சி வலியுறுத்து வந்தது, அரபு என்பது ஒரு மொழி. இந்த நாட்டை ஆக்கிரமித்து நாட்டின் வளங்களை கொள்ளையடித்து, சிங்கள மன்னர்களை கொலை செய்த ஆங்கிலேயனின் மொழியை தலை மீது வைத்து கொண்டாடுவோர் இந்த நாட்டுக்கு எந்த ஆயுதத்தையும் கொண்டு வராமல் வாசணைத்திரவியங்களுடன் வந்து இலங்கையை மணக்க வைத்த அரபு மொழியை தடை செய்ய முனைவது முட்டாள்த்தனம் என. அந்த வகையில் அரபு மொழியுடன் கோபிக்காமல் அந்த மொழியையும் படிப்பது தேசிய பாதுகாப்புக்கு ஏற்றது என்ற வகையில் அரசின் நடவடிக்கை இந்த அரசாங்கத்தின் திறமையை காட்டுகிறது என தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment