இதனை முஸ்லிம் அல்லாத நாடு ஒன்று அமுல் படுத்த விரும்பினால் அமுல் படுத்தலாம். ஆனால் அமுல் படுத்த வேண்டும் என இஸ்லாம் கட்டளை போடவில்லை.
நமது நாடு முஸ்லிம் அல்லாதோரை பெரும்பான்மையாக கொண்டதால் இங்கு ஷரீயா குற்றவியல் சட்டம் தேவையில்லை.
இதன் காரணமாகத்தான் நமது நாட்டில் மரண தண்டனை வழங்க முற்படுவதையும் உலமா கட்சி கண்டித்து வந்துள்ளது.
இஸ்லாமிய ஷரீயத் சட்டம் இறைவன் மீதான நம்பிக்கையின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்டதாகும். ஒருவரை இலகுவில் மரண தண்டனைக்கைதியாக்க முடியாது.
ஆனால் இறைவன் பற்றிய பயம் இல்லாவிட்டால் அரசியல் அதிகாரமும், பணமும் இருந்தால் அப்பாவியையும் மரண தண்டனைக்குள்ளாக்கலாம்.
ஆகவே நமது நாட்டுக்கு ஷரீயா குற்றவியல் சட்டம் தேவையில்லை. அது இதுவரை நம் நாட்டில் அறிமுகமாகவும் இல்லை.
முஸ்லிம் திருமண சட்டம் என்பது ஷரீயா சட்டம் அல்ல. அது பொதுமக்களின் அன்றாட சிவில் சட்ட பிரச்சினையாகும். இதில் காலத்துக்கு காலம் மாற்றங்கள் நடந்துள்ளன. ஆனாலும் நீதி அமைச்சராக இருந்த ரவூப் ஹக்கீம் சில ஆட்டக்கார பெண்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டதன் விளைவாகவே இது பூதாகரமாகியது.
இந்த சட்டத்திருத்தம் சம்பந்தமாக இப்போது அடிக்கடி பேச்சு அடிபடுவதால் இச்சட்டத்தும் ஷரீயா சட்டத்துக்கும் வித்தியாசம் புரியாமல் எதை எதையோ பேசிவிட்டு இப்போது மன்னிப்பு கேட்கும் நிலைக்கு வந்துள்ளார் ஆசாத் சாலி.
முஸ்லிம் திருமண சட்டமும் இந்த நாட்டின் சட்டம்தான் என்று சொல்லியிருக்கலாம். நம் நாட்டு முஸ்லிம் திருமண சட்டத்தை திருத்தாமல் அப்படியே இருக்க விடுங்கள் என்றுதான் நாம் கூறுகிறோம்
இதனால்த்தான் நாம் கூறுவது மார்க்கம் தெரிந்தோர் மார்க்கம் பேசுங்கள், அரசியல் தெரிந்தோர் அரசியல் பேசுங்கள். ஒன்றும் தெரியாதோர் மௌனமாக இருங்கள் என்று.
இன்று கண்டவனெல்லாம் இஸ்லாம் பேசுவதனாலும், அரசியல் பேசுவதனாலும் சமூகம் பல நிர்க்கதிக்குள் சிக்கியுள்ளது.
0 comments :
Post a Comment