கிரீன் பீல்ட் மக்களின் நீண்டநாள் பிரச்சினையாக இருந்து வந்த தண்ணீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸின் கல்முனை காரியாலயத்தில் நேற்று நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் நீர்வழங்கல் வடிகலமைப்பு சபையின் அக்கரைப்பற்று பிராந்திய பொறியியலாளர் பாவா, கல்முனை பிரதேச செயலாளர் ஜே. லியாக்கத் அலி, நீர் வழங்கல் வடிகலமைப்பு சபையின் கல்முனை நிலைய பொறுப்பதிகாரி எம்.எம். முனவ்வர் மற்றும் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான ஏ.சி.ஏ. சத்தார், சட்டத்தரணி ரோஷன் அக்தர், எம்.எஸ்.எம். நிஸார் ஜே.பி,மற்றும் 12ம் வட்டார அமைப்பாளர் எம். எஸ். பழீல், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பு செயலாளர் நௌபர் ஏ பாவா உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
எதிர்வரும் திங்கட்கிழமை தனி மானி அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட உள்ளதாக இக்கலந்துரையாடலின் போது நீர்வழங்கல் வடிகலமைப்பு சபை பொறியியலாளர், பாராளுமன்ற உறுப்பினருக்கு உறுதியளித்தார்.
0 comments :
Post a Comment