ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் விசேட பணிப்புரைக்கு அமைவாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் உயர் அதிகாரிகளைக் கொண்ட குழு நேற்று(15) கல்முனைக்கு விஜயம் செய்து கல்முனை நகர அபிவிருத்தி பணிகள் சம்மந்தமாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம் ஹரீஸினை சந்தித்து கலந்துரையாடியதன் பின்னர் கள விஜயமும் மேற்கொண்டனர்.
இவ் விஜயத்தின் போது நகர அபிவிருத்தி அதிகாரசபையின் கிழக்கு மாகாண பணிப்பாளர் எல் ஜே.லியனகே மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் கிழக்கு மாகாண திட்டமிடல் பிரதிப் பணிப்பாளர் எச்.எம் டபிள்யூ ஹேரத்
நகர அபிவிருத்தி அதிகார சபையின் கல்முனை காரியாலய திட்டமிடலாளர் எம்.எம் முஸ்தாக்,கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம்.பைறோஸ்,கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி,உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர்,கல்முனை மாநகர சபை பொறியியலாளர் ஏ.ஏ ஜெளஸி,தொழில்நுட்ப உத்தியோகத்தர் எம்.அமீர் உட்பட உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment