"கிராமங்களை பாதுகாப்போம்" என்ற தொனிப்பொருளில் சிவில் குழுக்களை சந்தித்த பொலிஸ்.



நூருள் ஹுதா உமர்-
க்கறைப்பற்று மற்றும் திருக்கோயில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிவில் பாதுகாப்புக்குழு தலைவர்கள், செயலாளர்கள், கிராம உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், மதகுருமார்களை அழைத்து "கிராமங்களை பாதுகாப்போம்" என்ற தொனிப்பொருளில் குற்றச்செயல்களில் இருந்து பிராந்தியங்களை பாதுகாப்பது சம்பந்தமாகவும் அதற்குரிய ஆலோசனைகளும் தீர்வுகளும் தொடர்பில் பிரதிப்பொலிஸ்மா அதிபர் ஏ.எஸ் கருநாரத்தவின் தலைமையில் இன்று (28) கலந்துரையாடப்பட்டது.

இந்நிகழ்வில் அம்பாரை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜயந்த ரத்நாயக்க மற்றும் அக்கறைப்பற்று உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஸ் எச் பிரதீப் குமார, அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பண்டார விஜயதூங்க, திருக்கோயில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திலகரத்ன மற்றும் ஏனைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிவில் பாதுகாப்பு அமைப்பின் ஆலோசகர்கள் என பலரும் கலந்துகொண்டு தீர்மானங்களையும், ஆலோசனைகளையும் முன்வைத்தனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :