பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் ( தேசிய பாடசாலை) களுவாஞ்சிக்குடி வளாகத்தில் அமைந்துள்ள ஆலயத்திற்கு தேவையான பூசை உபகரணங்களை களுவாஞ்சிக்குடி நியூ ஒலிம்பிக் விளையாட்டுக் கழகத்தினர் பாடசாலை முதல்வர் திரு.எம்.சபேஸ்குமார் அவர்களிடம் அண்மையில் கையளித்தனர்.
இந்நிகழ்வில் பாடசாலை பிரதி அதிபர் திரு.ரீ.ஜனேந்திரராசா , உதவி அதிபரும் பாடசாலை இந்து மாமன்ற தலைவருமான திரு.ஏ.கலாபராஜன் , பாடசாலை இந்து மாமன்ற உறுப்பினர்களான திரு.எஸ்.ரஞ்சித் குமார் , திரு. எஸ்.சரசகோபால் , களுவாஞ்சிக்குடி நியூ ஒலிம்பிக் விளையாட்டுக்கழக செயலாளர் சிவசிறி.அங்குச சர்மா , கழகத்தின் தலைவர் திரு.யோ.சதேசா உட்பட கழக உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment