முழு ஊரையும் பள்ளிவாசல் தலைமைத்துவத்தின் கீழ் ஒன்று சேர்த்து ஒரு கட்டுக்கோப்பான ஊராக சாய்ந்தமருதை இந்தத்தீவிற்கு மாத்திரமல்லாது சர்வதேசத்தின் மூலைமுடுக்கெல்லாம் வாழும் தமிழ்பேசும் சமூகத்திற்கு எடுத்துக்காட்டிய பெருமை மர்ஹூம் வை.எம். ஹனிபா சேரையே சாரும் என்றால் அது மிகையாகாது என தேசிய காங்கிரஸின் முக்கியஸ்தரும், கடந்த பொதுத்தேர்தலில் வேட்பாளருமான ஆசிரியர் ரிஷாத் செரீப் விடுத்துள்ள அனுதாப செய்தியில் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும், இவ்வாறான கட்டுக்கோப்பை அன்னாருக்குப் பின்னார் வேறெவராலும் உருவாக்கவும் முடியாது. அவ்வாறான ஒரு பரிசோதனை முயற்சியைக்கூட யாராலும் எத்தனித்துப் பார்க்கவும் முடியாது என்பது வெள்ளிடைமலைபோல் தெட்டத்தெளிவான பேருண்மையாகும். இத்துணை பாரிய இராஜதந்திரச்சாதனை புரிந்த மாமனிதரை மருதூர் மக்கள் என்றென்றும் மனதில் வைத்துப் போற்றுவதோடு மருதூரின் வரலாற்றில் ஹனீபா சேர் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டவராயிருப்பார் என்றால் அது மிகையாகாது. வல்லோன் அள்ளாஹ் அன்னாரின் கப்றை சுவனப்பூஞ்சோலையாக்கி ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவர்க்கத்தை அன்னாருக்குப்பரிசளிப்பானாக என்று தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment