ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தின் முதலாவது ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்





சாதிக் அகமட்-
றாவூர் நகர பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் இன்று மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான ஹாபிஸ் நசீர் அஹமத் தலைமையில் ஏறாவூர் பிரதேச செயலகத்தில் இன்று (16.03.2021) நடைபெற்றது.

ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மஹ்ஜுத் , ஏறாவூர் நகரசபையின் தவிசாளர் எம்.எஸ் நளீம், மற்றும்  உறுப்பினர்கள், ஏறாவூர் பற்று பிரதேச சபையின் தவிசாளர் சி. சர்வாணந்தான் மற்றும உறுப்பினர்கள் உற்பட அரச நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

ஏறாவூர் பிரதேச செயலகத்திற்கு உற்பட்ட பகுதிகளில் நடைபெறுகின்ற அரச நிறுவனங்களின் வேலைத்திட்டங்கள் மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள், வேலைத்திட்டங்களை முன்னெடுத்து செல்வதில் காணப்படுகின்ற குறைபாடுகள் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் விரிவாக கலந்துறையாடப்பட்டது.

அத்துடன் ஒவ்வொரு நிறுவனங்களும் தமது நிறுவனத்தின் ஐந்தாண்டு வேலைத்திட்டத்தை திட்டமிட்டு சமர்ப்பிக்குமாறு அபிவிருத்தி குழுவின் தலைவர் வேண்டிக்கொண்டார். மற்றும் அபிவிருத்தி குழுக்கூட்டம் இத்துப்போன அரசியலை கதைக்கின்ற இடமாக அல்லாமல் அபிவிருத்தி வேலைகளை திட்டமிட்டு வினைத்திறனாக மற்றும் பயனுடைய அபிவிருத்தி குழுக்கூட்டமாக இனி வரும் காலங்களில் நடைபெறும் என்றும் அபிவிருத்தி குழுவின் தலைவர் குறிப்பிட்டார்.

அபிவிருத்தி வேலைத்திட்டங்களை வெற்றிகரமானதாக மாற்றுவதற்கு அரச அதிகாரிகளும் , அரசியல் வாதிகளும்
சமாந்திரமாக பயணிக்கும் போதே எமது பிரதேசத்தின் அபிவிருத்தியை திறன்பட மேற்கொள்ள முடியும். என்றும் அரச அதிகாரிகள் தன்னோடு வேகமாக பயணிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் SMASM. சரூஜ் (நகரசபை உறுப்பினர்) மற்றும் முன்னாள் தவிசாளர்களான ஏ. ஏ நாசர், MIM. தஸ்லீம்

மற்றும் ZM. ஹிதாயத்துல்லாஹ் (ஓய்வு பெற்ற ஆசிரியர்) ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :