முஸ்லிங்களின் முக்கிய மார்க்க அறிஞர்களில் ஒருவரான ஜமாத்தே இஸ்லாமியின் முன்னாள் தலைவர் (அமீர்) ஹஸ்ரத் ஹஜ்ஜுல் அக்பர் அண்மையில் குற்றப்புலனாய்வு பொலிசாரினால் கைதுசெய்யப்பட்டார்.
முஸ்லிம் மக்களின் முக்கிய அறிஞர்களில் ஒருவரான ஹஸ்ரத் ஹஜ்ஜுல் அக்பரை தொடர்ந்தும் தடுத்துவைத்திருப்பது ஏற்றுகொள்ள முடியாத ஒன்றாகும். இந்த செயலை முஸ்லிம் சமூகம் வன்மையாக கண்டிக்கிறது. சட்டமொழுங்குக்கு பொறுப்பாக இருக்கின்ற ஜனாதிபதி அவர்களும் பிரதமரும் இந்த அரசாங்கமும் உடனடியாக அவரை விடுதலை செய்ய முன்வரவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் வேண்டுகோள் விடுத்தார்.
அவருடைய கைது சம்மந்தமாக ஊடகங்கங்களுக்கு விடுத்த அறிக்கையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் அவருடைய அறிக்கையில் குறிப்பிட்டுகையில்..
இன்று ஊடகங்கள் ஹஜ்ஜுல் அக்பரை புதிதாக கைது செய்தது போல கருத்து தெரிவிக்கின்றன.உண்மையில் அவர் கடந்த 2019ம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதிலின் பின்னர் கைது செய்யப்பட்டு விடுதலை செய்ய்யப்பட்ட நிலையில் மீண்டும் அவர் கைது செய்யப்பட்டு இருப்பது எங்களுக்கு மிகவும் கவலையான விடயமாக இருக்கின்றது. எனவே அரசாங்கம் அவர் சார்ந்த விசாரணைகளை நியாயமான முறையில் உடன் விசாரித்து அவரை விடுதலை செய்ய வேண்டும். என பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம் ஹரீஸ் குறிப்பிட்டு இருந்தார்.
0 comments :
Post a Comment