விளக்க மறியலிலுள்ள ஓல்ட்டன் தோட்ட தொழிலாளர்கள் விடுதலைக்காக நீதிமன்றில் ஆஜராகும் சட்டத்தரணிகள் குழு - தொ.தே.ச நடவடிக்கை
விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள ஓல்ட்டன் தோட்ட தொழிலாளர்களை விடுதலை செய்வதற்கான சகல நடவடிக்கைகளை தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரத்தின் ஆலோசணைக்கமைய மேற்கொண்டுள்ளதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய தேசிய அமைப்பாளர் ஜி.நகுலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கண்டி பல்லேகல சிறையிலிருக்கும் 09 பேரையும் தொழிலாலாளர் தேசிய சங்கத்தின் தலைவர், பிரதித்தலைவர் திகாம்பரம் எம்.பி, உதயகுமார் எம்.பி நேரில் சென்று பார்வையிட்டனர்
இதனையடுத்து சிறையிலிருக்கும் எட்டு பெண்கள் உட்பட ஒரு ஆணுமாக ஒன்பது பேரையும் அதே போல அட்டன் மாவட்ட நீதிமன்றின் உத்தரவிற்கமைய நாளைய தினம் 10-03-2021 ஆஜர்படுத்தப்பட்டவுள்ள ஏனைய 16 சந்தேக நபர்களையும் பிணையில் விடுதலை செய்ய சட்டத்தரணி மனோரி ரத்னசேகர தலைமையில் கண்டி உயர் நீதிமன்ற சட்டத்தரணி உள்ளிட்ட நால்வர் கொண்ட சட்டத்தணிகள் குழு நாளைய தினம் நீதிமன்றுக்கு ஆஜராகவுள்ளதாக நகுலேஸ்வரன் தெரிவித்தார்.
ஒல்ட்டன் தோட்ட நிர்வாகத்திற்கும் தொழிலாளர்ளுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையையடுத்து தோட்ட நிர்வாகம் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டில் 26 தொழிலாளர்கள் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
மேற்படி முறைப்பாட்டிற்கமைய இதுவரை 10 பேரை பொலிஸார் கைது செய்து அட்டன் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்திய வேளை சந்தேக நபர்களை எதிர்வரும் மார்ச் 10 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறும் ஏனைய 16 பேரையும் அன்றைய தினம் நீதிமன்றுக்கு ஆஜர்படுத்துமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டார்.
கடந்த 03 ஆம் திகதி முதல் ஒல்ட்டன் தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக நான்கு பிரிவுகளை சேர்ந்த சுமார் 600 தொழிலாளர்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் திகாம்பரம் எ..பி யின் ஆலோசணைக்கமையை தோட்ட நிர்வாத்துடன் தொழிலாளர் தேசிய குழு தோட்ட தலைவர்கள் சகிதம் பல சுற்று பேச்சுவார்த்தைகள் ஈடுபட்டது.
மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 09 தொழிலாளர்களையும் பல்லேகல சிறைச்சாலைக்கு நேரில் சென்று திகாம்பரம் எம்.பி, உதயகுமார் எம்.பி ஆகியோர் 08/03 பார்வையிட்டதுடன் , சட்டத்தரணி மனோரி ரத்தனசேகர தலைமையிலான கண்டி உயர் நீதிமன்ற சட்டத்தரணி உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழு அட்டன் நீதிமன்றுக்கு ஆஜராகவுள்ளதாக நகுலேஸ்வரன் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment