கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மஜ்மா நகர் பகுதி மக்களுக்கு நீர்த்தாங்கிகள் வழங்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (21) இடம்பெற்றது.
குறித்த பகுதியில் ஏற்பட்டுள்ள நீர் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் முகமாக முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட 40 நபர்களுக்கு நீர்த்தாங்கிகள் வழங்கி வைக்கப்பட்டன.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி அவர்களின் முயற்சியால் பைலா குடும்பத்தின் ஏற்பாட்டில் நீர் தாங்கிகள் வழங்கி வைக்கப்பட்டன.
மஜ்மா நகர் கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் ஏ.எல்.சமீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அதிதிகளாக முன்னாள் பிரதி அமைச்சர் குசைன் பைலா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நெளபர், முன்னாள் தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி, பிரதேச சபை உறுப்பினர்கள், மஜ்மா நகர் கிழக்கு அர் ரஹ்மா ஜும்மாப் பள்ளிவாயல் தலைவர் எஸ்.எச்.அஸ்ரப் சிராஜி உட்பட முக்கியஸ்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment