வரலாற்றுப்பிரசித்திபெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயத்தின் வருடாந்த பங்குனி உத்திரத்திருவிழா தற்போது சிறப்பாக நடைபெற்றுவருகிறது.
கடந்த வெள்ளியன்று ஆரம்பமான இத்திருவிழா எதிர்வரும் 28ஆம் திகதி ஞாயிறன்று தீத்த்தோற்சவத்துடன் நிறைவடையும் என ஆலய தர்மகர்த்தா இரா.குணசிங்கம் தெரிவித்தார்.
ஆலயபிரதமகுரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக்குருக்கள் தலைமையில் இப்பங்குனி உத்திர மகோற்சவம் இடம்பெற்றுவருகிறது.
தினமும் நண்பகல் பூஜையும் இரவுபூஜையும் நடைபெற்றுவருகிறது. பகல்பூஜையின்போது அறநெறி மாணவரின் உரையும் இரவுப்பூஜையின்போது பெரியோர்களின் சொற்பொழிவும் இடம்பெற்றுவருகிறது.
சுகாதாரமுறைப்படி பக்தர்கள் மட்டுப்படுத்தப்பட்டஅளவில் திருவிழாக்களில் பங்கேற்றுவருகிறார்கள்.
0 comments :
Post a Comment