தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலிக்கு எதிராக சட்டநடவடிக்கையை எடுக்குமாறு கோரி குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முப்பீடங்களின் பிக்குகளின் ஒன்றியம் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் இந்த முறைப்பாட்ட வழங்கியுள்ளது.
அண்மையில் கொழும்பில் ஊடக சந்திப்பை நடத்தியிருந்த அசாத் சாலி, முஸ்லிம் சட்டங்களை மாற்றியமைக்க அரசாங்கம் முயற்சித்தாலும் அரசாங்கத்தின் சட்டங்களை தாங்கள் பின்பற்றப் போவதில்லை என்றும், மாறாக முஸ்லிம் சட்டங்களையே பின்பற்றுவதாகவும் கூறியிருந்தார்.
அசாத் சாலியின் இந்தக் கூற்று இனங்களுக்கு இடையே ஐக்கியத்தை பாதிப்படையச் செய்யும் என்று சுட்டிக்காட்டி பஸ்ஸரமுல்லே பஞ்ஞாஜோதி தேரரினால் மேற்படி முறையிடப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment