அம்பாறை மாவட்டம் பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய முன்றலில் இடம்பெற்று வருகின்ற சுழற்சி முறையில் இடம்பெற்று வருகின்ற உணவு தவிர்ப்பு போராட்டத்தில் முஸ்லீம் மக்களும் இணைந்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை(5) ஆரம்பமாகி இப்போராட்டம் இடம்பெற்று வந்த நிலையில் 7 ஆவது நாளான இன்று(11) பொலிகண்டி வரையிலான பேரணியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளரும் கல்முனை இளைஞர் சேனையின் முன்னாள் தலைவருமான தாமோதரம் பிரதீபன் ,நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் என். தர்சினி ,தமிழ் தேசிய கூட்டமைப்பின் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான அழககோன் விஜயரட்ணம் ,பொன் செல்வநாயகம் , தமிழ் தேசிய மக்கள் முன்னணி இளைஞர் தலைவர் துசானந்தன் ,ஜோசப் பரராசசிங்கம் மக்கள் அமைப்பின் தலைவி கந்தையா கலைவாணி , உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இவர்கள் சுழற்சி முறையான இப்போராட்டத்தில் பல்வேறு தடைகளை உடைத்து முன்னெடுத்துள்ளோம்.அரசாங்கம் பல தவறுகளை செய்துள்ளது.அதற்காக சர்வதேச குற்றவியல் மன்ற விசாரணையை(ICC) கோரியே ஆதரவாக இப்போராட்டத்தை மேற்கொண்டுள்ளோம் என தத்தமது கருத்தில் தெரிவித்தனர்.
0 comments :
Post a Comment