நிகழ்ச்சிக்கு தென்சென்னை மாவட்ட தலைவி ராபியத்துல் பசரியா தலைமை தாங்கினார்.
மாவட்ட பேச்சாளர் டாக்டர் யாஸ்மின் வரவேற்றார்.
மாவட்ட செயலாளர் சயீதா பீனா, கென்ரிச் சர்வதேச பள்ளி துணை முதல்வர் பாத்திமா கான், கேம்பஸ் ஃப்ரண்ட் சென்னை மாவட்ட பொறுப்பாளர் ஜைனப் அல் ஹதீஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நூருல் ஹிக்மா பள்ளி முதல்வர் சுபைதா பீவி, பாப்புலர் ஃப்ரண்ட் தென்சென்னை மாவட்ட தலைவர் அபூபக்கர் சாதிக், நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர் காமிலா அஷ்ரஃப் ஆலிமா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
நிகழ்ச்சியில் வரதட்சணைக்கு எதிராக விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது. பெண்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி நடத்தப்பட்டு, சிறப்பாக பதிலளித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் கல்லூரி மாணவி ஒருவருக்கு கல்வி உதவித்தொகையும், கொரோனா காலகட்டத்தில் சிறப்பான முறையில் களப்பணி ஆற்றிய நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் உறுப்பினர் ரிஹானாவிற்கு பரிசும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இறுதியாக மாவட்ட செயற்குழு உறுப்பினர் அஹ்மத் மலிகா நன்றி கூறினார். நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment