இன்று கொழும்பில் ஞானசேர தேரர் சத்யாகிரகம்!



J.f.காமிலா பேகம்-
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளரான கலகொட அத்தே ஞானசார தேரர் இன்று வியாழக்கிழமை சத்தியாக்கிரகப் போராட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளார்.

கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் மேற்படி போராட்டம் இன்று காலை ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர் தாக்குதல் பற்றிய ஆணைக்குழு அறிக்கையானது பௌத்த நாட்டில் பௌத்த அமைப்புக்கள் அடிப்படைவாத முரண்பாடுகளை தோற்றுவிக்கின்றன. என்ற தவறான நிலைப்பாட்டை ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பிலான விசாரணை அறிக்கை தோற்றுவித்துள்ளது என்று ஞானசார தேரர் தெரிவித்தார்.

இது தவறான செயற்பாடு என்பதை அரசாங்கத்திற்கு தெரிவித்துள்ளோம்.பௌத்த உரிமைகளை பாதுகாக்க அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்படுவது அவசியமாகும் என்று குறிப்பிட்டுள்ள அவர், அதனை வலியுறுத்தியே சத்தியாக்கிரகப் போராட்டத்தை நடத்தவிருப்பதாகவும் கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :