அம்பாறையில் மழையுடன் கூடிய காற்றுடன் காலநிலை - பொதுமக்கள் சிரமம்

பாறுக் ஷிஹான்-

ம்பாறையில் மழையுடன் கூடிய காற்றுடன் காலநிலை மாற்றம் திடிரென ஏற்பட்டமையினால் பொதுமக்கள் சிரமங்களை எதிர்கொண்டனர்.சில இடங்களில் மழை குறைந்து காற்றுடன் கூடிய காலநிலை காரணமாக பொதுமக்கள் சிரமங்களை எதிர்கொள்வதுடன் மரங்களின் கிளைகளும் முறிந்து விழுந்துள்ளன.

இன்று திடீரென காற்று அம்பாறை மாவட்டத்தின் பெரியநீலாவணை, கல்முனை, நற்பிட்டிமுனை, நாவிதன்வெளி,காரைதீவு, நிந்தவூர், சம்மாந்துறை,அக்கரைப்பற்று ,பகுதிகளில் கடும் மழையுடன் காற்று வீசியது.இதனால் வீதியால் பயணம் செய்த பொதுமக்கள் வாகன சாரதிகள் சிரமங்களை எதிர்கொண்டனர்.

சில இடங்களில் புழுதியுடன் கூடிய காற்று வீசியதுடன் விளம்பர பலகைகளும் சேதமடைந்தன.கடற்கரையோரங்களில் உள்ள தென்னைமரங்கள் அகோர காற்றினால் ஓலைகளை இழந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :