ஆப்கானிஸ்தானில் சமாதான முன்னெடுப்புகளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பெரிதும் விரும்புகின்றது.- ரவூப் ஹக்கீம்



ப்கானிஸ்தானில் நிலவிவரும் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவரவும், நிலையானமற்றும் கண்ணியமான அமைதியை அடைவதற்கு உறுதியளிக்கவும் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரிடமும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேண்டுகோள் விடுக்கிறது. அத்துடன்,ஆப்கானிஸ்தானில் சமாதான முன்னெடுப்புகளை கட்சி பெரிதும் விரும்புகின்றது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் திங்கட்கிழமை (15) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் தற்போது இடம்பெறும் வன்செயல்களைக் கண்டித்தும், அந்நாட்டில் சமாதானத்தை நிலைப்பெறச் செய்ய எத்தனிக்குமாறும் விடுக்கப்பட்டுள்ள அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஆப்கானிஸ்தானில் வன்முறைகள் அதிகரிப்பதைத் தவிர்ப்பதற்காக அனைத்துத் தரப்பினரிடமும் வேண்டுகோள் விடுக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விரும்புகிறது.தற்போதைய நிலைமை சந்தேகத்திற்கு இடமின்றி நீடித்த அமைதியை அடைவதற்கு எதிர்மறையாகவே இருக்கின்றது.
கண்மூடித்தனமான வன்முறைத் தாக்குதல்கள் பற்றி அடிக்கடி முறையிடப்படுகின்றன. அவை மிகவும் புதிய சமாதான முன்னெடுப்புகளைத் தடுத்து நிறுத்தும் தன்மையைக் கொண்டுள்ளன. ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள நிிலைமையை நாங்கள் மிகவும் உன்னிப்பாக உற்று நோக்குகின்றோம்.
இலங்கையின் அரசியல் வன்முறை காரணமாக பெரும் பாதிப்பை சந்தித்து, பல உயிர்களை இழந்துள்ளது. அரசியல் நோக்கங்களை அடைவதற்கான பயங்கரவாதச் செயற்பாடுகள் துரதிர்ஷ்டவசமாக, தேசியம், இனம், சமயம்; ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட அப்பாவி பொதுமக்களை குறிவைக்கின்றன.
ஆப்கானிஸ்தானில் இடம்பெற்றுவரும் பயங்கரவாத தாக்குதல்களை நாங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி வன்மையாக கண்டிக்கிறோம், அரசியல் நோக்கங்களை அடைவதற்கு இதுபோன்ற கண்மூடித்தனமான வன்முறைகளுக்கு இஸ்லாமிய நியாயங்கள் எவையும் இல்லை என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
பரஸ்பர நம்பிக்கையைக் கட்டியெழுப்பி ,சமாதானத்திற்கான சரியான பாதையை இனங்காண்பதற்கான பேச்சுவார்த்தைகளுக்கு முன்னுரிமையளித்து ,மிக அவசரமாக அதனை முன்னெடுப்பது காலத்தின் தேவையாகும்.சமாதானம் மற்றும் நல்லிணக்கத்திற்கான முக்கிய வாாய்ப்பாக 5000 க்கும் மேற்பட்ட தலிபான் கைதிகளை விடுவிப்பதற்கான ஆப்கானிய அரசாங்கத்தின் முடிவு சரியான திசையில் ஒரு படிக்கல்லாகும்.ஆனால் அத்தகைய சலுகை எதிர்பார்த்த பலனை தரவில்லை என்பது கவலைைக்குரியது.
ஆப்கானிஸ்தானின் இன்றைய நிலைமைக்கு முன்னைய சமாதான முன்னெடுப்புகள் தொடர்பாகக் கற்றுக்கொண்ட பாடங்களைக் கவனமாகக் கையாள வேண்டும். மேலும், அண்டை நாடுகளில், முக்கியமான பிராந்திய சக்திகளின் முழுமையான ஈடுபாட்டுடன் சர்வதேச சமூகத்தால் ஆதரிக்கப்பட்டு மேற்பார்வையிடப்பட்ட ஒரு ஒப்புக் கொள்ளப்பட்ட மத்தியஸ்தச் செயல்முறையின் தேவை சமாதான முன்னெடுப்புகளை வெற்றிகரமாக நிறைவு செய்வதற்கு இன்றியமையாதது. ஆப்கானிய செயல்பாட்டில் உருவாகி வரும் ஆபத்தான முட்டுக்கட்டை, மேலும் தொடர்வதற்கு அனுமதிக்கக்கூடாது.
ஆப்கானிஸ்தான் மக்களின் நான்கு தசாப்த கால துன்பியல் அனுபவங்களைக் கருத்தில் கொண்டு, ஆப்கானிஸ்தான் சமாதான முன்னெடுப்பில் உள்ள அனைத்து பங்குதாரர்களும் ஆப்கானிஸ்தானின் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், போர் நிறுத்தப்படுவதைத் தொடர்ந்து ஆப்கானிய மக்கள் நிரந்தர அமைதியின் பயன்களைஅனுபவிப்பதை உறுதி செய்வதற்கும் இணைந்து செயல்படுவதே பயனளிக்கும் என்று நம்புகிறோம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :