முன்னாள் அமைச்சா் ரவுப் ஹக்கீம் மினுவான் கொடையில் நேற்று 20. சிரேஸ்ட ஊடகவியலாளா் எம்.ஏ.எம் நிலாமின் பவள விழாவின்போது அவா் கலந்து கொண்டு உரையாற்றுகையில்
இந்த மேடையில் நீதியமைச்சா் அலி சப்றி இங்கு இருப்பதனால் இன்னும்மொறு விடயத்தினை சொல்லிவைக்க விரும்புகின்றேன். 2019ஆம் ஆண்டில் மினுவான்கொடைப் பிரதேசம் பெரிய கலவரத்திற்குள்ளானது. அது குருநாகல் தொட்டு மினுவான்கொடை பரவியது இவ் ஊா் வெகுவாகப் பாதிக்கப்பட்டதொரு பிரதேசமாகும்.
பாதிக்கப்பட்டவா்களுக்கு இதுவரை எவ்வித நிவாரணமோ கிடைக்கவில்லை. ஓர் இனக் கலவரம் வருகின்றபோது இனக் கலவரத்திற்கு காரணமாக இருக்கினற் அல்லது வெறுப்பூட்டல் பேச்சுக்களை பேசுகின்ற யாராக இருந்தாலும் அவா்களுக்கெதிராகச் எடுக்கப்படுகின்ற சட்ட நடவடிக்கைகளுக்கு என்ன நடக்கின்றது. ? இது குறித்து நாம் திரும்பிப் பாா்க்க வேண்டியிருக்கின்றது.
இவ்வாறான குற்றத்திற்காக எமது நாட்டில ஒரே ஒரு சட்டம் ஏற்பாடு உள்ளது அதாவது ஜ.சி.சி..பி 3வது சா்த்தில் 3 -1 வெறுப்புப் பேச்சு என்கின்ற விடயம் இச் சட்டம் 2வது மகா யுத்த காலத்தில் ஜரோப்பியா்களது நாட்டில் இருக்கின்ற யூதா்களுக்கு எதிராக வெறுப்பூட்டும் பேச்சுக்களை நிறுத்துவதற்காக கொண்டு வரப்பட்ட சட்டம்ாகும். அது எமது நாட்டில் கலவரம் நடைபெறுகின்றபோது துண்டி விடுகின்றவா்களுக்கு அதில் ஈடுபடுபவா்களுக்கு தண்டித்தல் வேண்டும் என அரசு சொல்லுகின்றது.
ஆனால் 2014ல் அளுத்கம பேருவளை 2016., 2017 ஜின்தோட்ட, அதன் பிறகு திகனை கண்டி, உயிா்த்த ஞயிறு தாக்குதலின் பிற்பாடு மினுவான்கொடை , குருநாகல் என இனக்கலவரன்களின்போது நாம் மிக மோசமாக பாதிக்கப்பட்டோம். இக் காலத்தில் சில வழக்குத் தாக்கல்கள் செய்திருந்தோம்.
இதுவரை யாரும் தண்டிக்கப்படவில்லை.
அதே நேரம் இவ் விடயத்தினை நீதியமைச்சு கவணிக்கப்படல் வேண்டும். ஆனால் வேறு விடயங்களுக்காக இச் சட்டம் பாவிக்கப்படுகின்றது சாதாரணமாக அப்பாவி ஊடகவியாலாளா் அல்லது சிறுகதை எழுத்தாளன் ஏதாவது சமுக ஊடகங்களில் இனம் சம்பந்தமாக எழுதினால் பேசினால் தண்டிக்கபபடுகின்றனா். அண்மையில் கண்டியில் கைது செய்யப்பட்ட ராசிக் மற்றும் சிங்கள ஊடகவியாலா் ஒருவரும் தண்டிக்கப்பட்டனா்.

அத்துடன் ஊடகச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் முக்கியமாக இந்த நாட்டில் ஒரு மனிதனுக்கு இருத்தல் வேண்டும். நாம் வெறுப்பூட்டல் அல்லது இனக் கலவரம் சம்பந்தமாக பொலிஸில் முறையிட்டாலும் அதற்காக பொலிஸாா் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற வேண்டியுள்ளது.
ஆகவே தான் இவ்வாறான விடயங்கள் சாதாரணமாக பொலிஸில் முறையிட்டு குற்றப்பத்திரிகை ஊடாக மஜிஸ்திரேட் நீதிமன்றில் வழக்குகள் நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும். வன்முறையாளா்கள் தண்டிக்கப்படல் வேண்டும் சாதாரணமாக பாதிக்கப்பட்டவா்களுக்கு நீதி நியாயம் கிடைத்தல் வேண்டும். ஆகவே தான் இலங்கையின் சில உள் விவகாரங்கள் ஜெனிவாவில் கூட பேசப்படுகின்றது.
மினுவான் கொடை பாதிக்கப்பட்ட தொரு பிரதேசம் அப் பிரதேசத்தில் வாழ்கின்றதொரு மூத்த ஊடகவியலாளா் நிலாம் அவா்களின் வைபவத்தில் இங்கு உள்ள ஊடகவியலாளா்கள் இவ்விடயங்களை பூதக்கண்ணாடி போன்று பாா்த்து இதனைக் வெளிக் கெனருதல் வேண்டும். என முன்னாள் அமைச்சா் ரவுப் ஹக்கீம் உரையாற்றினாா்.
அமைச்சா் அலி சப்றி அங்கு உரையாற்றுகையில்
கடந்த உயிா்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னா் ஆயிரம் வருடங்களாக சகல சமுகங்களுடனும் சமாதானமாக ஒரு இனைப்புப் பாலமாகவும் இருந்து வந்த முஸ்லிம்களை சந்தேகக் கண்ணோடு பாா்க்கின்ற நிலைமையுள்ளது. இந்த நாட்டில் 80 வீதமாணவா்கள் சிங்கள மொழியைப் பேசுகின்றவா்கள் உள்ளனா்.

ஆகவே நாம் தமிழ் மொழியை ஊடக சிங்கள மொழியை எமது எதிா்கால சந்ததியினருக்கு கற்பித்தல் வேண்டும். இரு மொழிகளிலும் வெளிக் கெனரும் மொழிகள் ஒரே செய்தியை கருத்தினைச் சொல்வதற்கு நமது முஸ்லிம் ஊடகவியலாளா்கள் முன்வருதல் வேண்டும். சிங்கள மொழி ஊடகத்துறையில் எமது இளைஞா்கள் யுவதிகள் பணியாற்றுவதற்கு சிரேஸ்ட ஊடகவியாளா்கள் வழிகாட்டல் வேண்டும்.
இந்த நாட்டில் ஜாதி மத இன குல மொழி வேறுபாடின்றி சகலரும் இந்த நாட்டின் இலங்கைப் பிரஜை எனும் கோட்பாட்டில் நாம் பயணிக்க வேண்டும். இந்த நாட்டின் வாழும் ஏனைய இரண்டு சமுகங்களது இணைப்புப் பாலமாகவும் சமாதானமாகவும் நாம் பயணிப்போம் என அமைச்சா் அலி சப்றி அங்கு உரையாற்றினாா்.
0 comments :
Post a Comment