உலக கவிதைத் தினத்தை முன்னிட்டு வெள்ளாப்புவெளி நடத்திய விதை வாசிப்பும் நூல் வெளியீடும்..

லக கவிதைத் தினத்தை முன்னிட்டு வெள்ளாப்புவெளி நடத்திய கவிதை வாசிப்பும் - முல்லை முஸ்ரிபா வின் வரைபடமற்றவர்களின் காலடி எனும் கவிதைத் தொகுதி வெளியீடும் 21.03.2021 அன்று இலங்கை நேரம் மாலை 4.00 மணிக்கு ZOOM MEETING வழியாக, நடைபெற்றது..

மேமன்கவி யின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில். முல்லை முஸ்ரிபா வின் வரைபடமற்றவர்களின் காலடி கவிதைத் தொகுப்பின் நூலின் முதற்பிரதியினை இலக்கியப் புரவலர் ஹாஸிம் ஒமர் பெற்று கொண்டார்.

தொடக்கவுரையை முல்லை முஸ்ரிபா நிகழ்த்தினார்.

கெக்கிராவ ஸூலைஹாவின் மொழிபெயர்ப்பில் ஆங்கில கவிதைகள், எம்.ரிஷான் ஷெரீப்பின்; மொழிபெயர்ப்பில் சிங்கள கவிதைகள், வாசிக்கப்பட்டன.. டாக்டர் தாஸிம் அஹமது தாட்சாயணி, முல்லை முஸ்ரிபா ஆகியோரின் தமிழ்க் கவிதைகளின் வாசிப்பு இடம்பெற்றதோடு, பலஸ்தீன், குர்திஸ்தான், பாகிஸ்தான், ஐவரிகோஸ்ட். சிலெ போன்ற நாடுகளின் கவிதைகளை ஆசிரியர் பரத் மற்றும் இளங்கவிஞர்களான வானம்பாடி பாத்திமா முஜா, லைலா அக்ஷயா , ஆகியோரும், மாணவர்களான அனஸ்,மிதா மர்யம், போன்றவர்கள் முன் வைத்தார்கள்..

நூல் வெளியீட்டுரையையும் கவிதைத் தின உரையாகவும் கவிஞர் சேரன் சிறந்த உரையை நிகழ்த்திதனார்.. ஏற்புரையை முல்லை முஸ்ரிபா முன் வைத்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :