பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் ( தேசிய பாடசாலை ) களுவாஞ்சிகுடி மாணவத்தலைவர்களுக்கான சத்தியப்பிரமாணம் மற்றும் சின்னம் சூட்டும் நிகழ்வும் இன்று ( 24 ) பாடசாலை திறந்தவெளியரங்கில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
பாசாலை அதிபர் திரு.எம்.சபேஸ்குமார் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் பட்டிருப்பு கல்வி வலயப் பிரதி கல்விப் பணிப்பாளர் திரு.பீ.திவிகரன் , உதவிக் கல்விப் பணிப்பாளர்களான திரு.நேசகந்திரன் , திரு.இதயகுமார் , களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை , வைத்திய அத்தியட்சகர் டாக்டர் . புவனேந்திரநாதன் , களுவாஞ்சிகுடி விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி மேஜர் பிரேமரெட்ண ,பொறியியலதளர் சுலக்ஸன் , பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் , ரீ.சத்தியரரூபன் , பாடசாலை பிரதி அதிபர்களான திரு.என்.நாகேந்திரன் , திரு.ரீ.ஜனேந்திரராசா , உதவி அதிபர்களான திரு.ஏ.கலாபராஜன் , திரு.எம்.ரவிச்சந்திரன் , திரு.வீ.ரவீந்திரமூர்த்தி , பழைய மாணவர்களான திரு.க.கோகுல ரஞ்சன் , திரு.ந.கேதீஸ்வரன் , திரு.ஆ.பிரதீபன் , திரு.மோ.பிரதீபன் , திரு.சோ.உதயசுந்தரம் , திருமதி.சுபோதினி திருச்செல்வம் , திருமதி.சகீதா குகானந்தன் , திருமதி றுசேஜந்தினி தவநாதன் , திருமதி.நித்தியா நவருபன் , திரு.சி.ஜீலன் , திருமதி.சிவமலர் நவதாசன் , ஒழுக்காற்று குழு உறுப்பினர் திரு.கே.கோவண்ணன் , ஆரம்ப பிரிவு பகுதித்தலைவரும் ஒழுக்காற்று குழு செயலாருமான திரு.கேதீஸ்வரன் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டு மாணவத்தலைவர்களுக்கு சின்னங்களை சூட்டி வைத்தனர்.
பாடசாலை பகுதித் தலைவர்கள் , ஆசிரியர்கள் , கல்விசாரா உத்தியோஸ்தர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு மாணவத்தலைவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
சிரேஸ்ட மாணவத்தலைவராக செலவன்.என்.பபிலோசனும் சிரேஸ்ட மாணவத் தலைவியாக செல்வி.பீ.விபாஞ்சனியும் அதிதிகளினால் சின்னம் சூட்டி கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்ச்சிகளை படசாலை ஆசிரியை கோகுல சாந்தி நெறிப்படுத்தியிருந்தார்.
0 comments :
Post a Comment