எம்.ஐ.எம்.அஸ்ஹர்-
காட்டு யானைகளின் பொதுவான அச்சுறுத்தலால் சொத்து சேதம், பயிர் சேதம் மற்றும் உயிர் இழப்பு தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காட்டு யானை அத்துமீறல் மற்றும் நகர்ப்புற ஆக்கிரமிப்புகளைத் தடுக்க பாரம்பரிய யானை வேலி தோல்வியுற்றதால், புதிய முறைகள் ஆராய்ச்சி மட்டத்தில் சோதனை செய்யப்படுகின்றன.
அவ்வாறு செய்வதற்கான ஒரு நவீன முறையாக, வெல்லவாய பிரதேச சபையின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு குப்பை முற்றத்தை சுற்றி கட்டப்பட்ட தொங்கும் யானை வேலியின் செயல்திறனை சோதிக்கும் செயற்பாடு பரீசீலிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த தொங்கும் யானை வேலி அமைக்கப்பட்டதால், காட்டு யானைகள் கடந்த ஒன்பது மாதங்களாக குப்பை முற்றத்தில் நுழைய முடியவில்லை. எனவே, இந்த சோதனை மிகவும் வெற்றிகரமான வழிமுறையாக இருப்பதால், காட்டு யானைகள் ஏராளமாக உள்ள பகுதிகளில், எதிர்காலத்தில் பல மாவட்டங்களில் இவ்வாறான தொங்கு வேலிகளை அமைக்கவுள்ளதாக வனஜீவராசிகள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment